சாகித்திய சுருதிலயா வழங்கும் இசை அரங்கம்

டென்மார்க்கின் புகழ் பெற்ற சங்கீத ஆசிரியை திருமதி குமுதினி பிறித்திவிராஜ் அவர்களுடைய சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி இவ்வாரம் விழா கோலம் பூணுகிறது.

இக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்வு எதிர்வரும் சனி 20.10.2017 மாலை 4.00 மணியளவில் கேர்னிங் கலாச்சார இல்லம் 7 நோரகேத – 7ல் இருக்கும் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இசையரங்கம் 2018 என்ற மகுடமிட்டு நடைபெறும் இந்த நிகழ்வு பார்த்து மகிழவும் ஆதரித்து ஆனந்தமடையவும் உரியதோர் நிகழ்வாகும்.

கிடைத்தற்கரியது அத்தி பூத்தால் போல அரிதாக வருவது..

வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் தமது சங்கீத திறமையை காண்பிக்க இருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஆறு இசை மாணவிகள் பாடுகிறார்கள் என்றால் பாருங்களேன்.

இது சாதாரண நிகழ்வல்ல சிறந்த சங்கீத ரசிகர்கள், இசையின் கலாபிமானிகள் கலந்து சிறப்பிக்க வேண்டிய நிகழ்வாகும்.

முதலில் இப்படியான நிகழ்வுகளை பார்க்கக் கொடுத்து வைக்க வேண்டும் என்று நாம் சுயமாக புரிவது அவசியம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி என்றாமல்..

இப்போதே தயாராகுங்கள்.. அன்றைய நாளை இதற்காகவே ஒதுக்கி வையுங்கள்..

இசையால் வசமாகா இதயமெது..

அதுவும் சங்கீத ஆசிரியை குமுதினி பிறித்விராஜ் அவர்களுடைய மாணவிகள் என்றால் சொல்லவும் வேண்டுமோ..?

சாகித்திய சுருதிலயா பல தரமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கும் வழியில் இந்த நாள் ஓர் அரிய நாளாகும்.

அலைகள் 18.10.2018 வியாழன்

Related posts