பட்டப்பகலில் இளம்பெண் யாழில் கடத்தல் !

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் வைத்து 27 வயதுக்குட்பட்ட பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் வைத்து பெண்ணை கடத்தும் போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் அவதானித்துள்ளார்.

இதையடுத்து பெண்ணைக் கடத்திய ஆட்டோவை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பின்தொடர்ந்துள்ளார்.

பெண்ணைக் கடத்திய ஆட்டோ செம்மணி, ஆடியபாதம் வீதி ஊடாக திருநெல்வேலி, மருத்துவபீடம் வழியாக சென்று கொண்டிருந்த போது ஆட்டோவைப் பின்தொடர்ந்து சென்றவர் மீது பெண்ணின் ஆடையை களைந்து முகத்தில் வீசியெறிந்துவிட்டு கடத்தல்காரர்கள் சென்றுள்ளனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர் பொலிஸ் மற்றும் 119 ஆகிய இலக்கங்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக அழைப்பு மேற்கொண்டபோது குறித்த இலக்கங்களில் இருந்து பதில் கிடைக்காத நிலையில், யாழ்ப்பாணம் அரசாங்க அதிபருக்கு தொடர்பை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆட்டோவில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts