டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம்லெப்.மாலதி அவர்களின் 31 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் விழித்தெழுவோம் என்ற நிகழ்வும்

Herning நகரில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது . விழித்தெழுவோம் நிகழ்வானது பொதுச்சுடர்ஏற்றலுடன்ஆரம்பமானது. 2ம் லெப் .மாலதி, லெப்.கேணல் குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்குஈகச்சுடர்,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . அதனை தொடர்ந்துமக்கள் சுடர்,மலர்வணக்கம் மாவீரர்களுக்கு செலுத்தினார்கள். அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது .

மேடை நிகழ்வானது எழுச்சி கானங்களோடு ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து கவிதைகள் ,பேச்சுகள்,மாவீரர்களின்வீரத்தை உணர்த்தும் எழுச்சி நடனங்கள், தாயக மக்களின்அவலங்களை எடுத்துரைக்கும் நாடகங்கள் என்பன நடைபெற்றன.

டென்மார்க் மகளிர் அமைப்பினரால் தமிழீழப்பெண்கள் எழுச்சிநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது . நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்றபாடலுடனும் ,தமிழர்களின் தாரகமந்திரத்துடன் “தமிழர்களின்தாகம் தமிழீழத் தாயகத்துடன்”நிகழ்வு நிறைவு பெற்றது.

Vedhæftede filer:

Related posts