இவரைத் தெரியுமா டெயர் சலீம்

புலம் பெயர்ந்து டென்மார்க் வந்தாலும் இங்குள்ள வளங்களை வைத்து, தாய்மொழி திறனையும் ஆதாரமாக வைத்து வெற்றி பெற முடியும் என்பதற்கு டெயர் சலீம் என்ற இந்த ஈராக்கிய இளைஞர் நல்லதோர் உதாரணமாகும்.

உணவெயாட்டன் என்ற புகழ் பெற்ற டேனிஸ் திரைப்படத்தில் நடித்த இவரை இன்று டென்மார்க்கில் அறியாத டேனிஸ் மக்கள் இல்லை என்றே கூறலாம்.

இப்படம் பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இதில் நடித்தமைக்காக இவர் 2018ம் ஆண்டு டென்மார்க்கின் சிறந்த நடிகர் விருதை வெற்றி பெற்றிருந்தார்.

அதைத் தவிர இவர் 2008ம் ஆண்டு கோ மெல் பிறல் ஜமால் என்ற படத்தில் நடித்து பொடில் விருதும் பெற்றார்.

டென்மார்க்கில் உள்ள தொலைக்காட்சி தொடர் டிகேற்றிலும் நடித்துள்ளார். இது போல வெளிநாட்டு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

டேனிஸ், அரபு, ஆங்கிலம், டொச் மொழி போன்ற மொழிகளை சிறப்பாக பேச வல்லவர். அத்தோடு பிரஞ்சு, ஸ்பானியா போன்ற பாஷைகளையும் பேச வல்லவர்.

இவர் நடித்த கிறியர் என்ற தொலைக்காட்சி தொடர் டென்மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. கேம் ஒப் தோர்னஸ் என்ற படத்திலும் நடித்தவர்.

1977 ம் ஆண்டு பிறந்த இவர் ஏழு வயதில் டென்மார்க் வந்தவர். 2007ம் ஆண்டு பைலட்டாக படிக்க தொடங்கியவர்.

தொலைக்காட்சி 2ல் போஸ்வா என்ற நாடகத் தொடரில் மூன்று சீசன்கள் நடித்துள்ளார்.

டென்மார்க்கின் சர்ச்சைக்குரிய அமேயர் பகுதியில் வாழ்ந்தாலும் சிறந்த முறையில் இணைவாக்கம் அடைந்து புகழ் பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார்.

வெளி நாடுகளில் வாழ்வது கடினம் என்று கூறுவோர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வெளிநாட்டவர் இவராகும்.

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்ற பாடல் வரிகளை பாடுவோர் சிந்திக்க வேண்டிய ஒரு தன்னம்பிக்கை மனிதர் இவராகும்.

அலைகள் 14.10.2018 ஞாயிறு

Related posts