இயந்திரம் பூட்டியே வைரமுத்துவை மடக்க வேண்டும்

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

பாடகி சின்மயி பாலியல்குற்றச்சாட்டு தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவுமூலம் விளக்கம் அளித்தார். அதில், என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது; வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை இப்போது யாரும் சொல்ல வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை தான் செய்ய வேண்டும் என்று பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts