பேஸ்புக் இணைய மோசடியில் சிக்கியோர் 29 மில்லியன்

கடந்த செப்டெம்பர் மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் மீது இணைய களவாளிகள் நடத்திய தாக்குதலில் சிக்குப்பட்டோர் தொகை 29 மில்லியன் என்று மிகவும் காலதாமதமாக அறியத்தந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

இவர்களில் 15 மில்லியன் பேர்களுடைய தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் போன்றவற்றை களவாடியிருக்கிறார்கள்.

அடுத்த 14 மில்லியன் பேர்களுடைய முகநூல் பக்கங்களில் வேறு விடயங்கள் களவாடப்பட்டுள்ளன.

வங்கிகளின் இரகசிய இலக்கங்களை மாற்றுவது நல்லது இணைய இரகசிய இலக்கங்களை மாற்றுவது நல்லதென முன்னர் பல பேராசிரியர்கள் அறிவுரை கூறியிருந்தார்கள்.

இந்த விடயத்தில் ஏற்பட்ட இழப்புக்களும் 29 மில்லியன் பேரும் அடைந்த பாதிப்புக்களும் என்னவென்பதை செய்திகளில் காண முடியவில்லை.

அதேவேளை பேஸ்புக் நிறுவனத்தின் மீது இதற்கு முன்னர் இவ்வளவு மோசமான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இது போன்ற சிக்கலில் மாட்டி செனட்டின் விசாரணைக்கு பேஸ்புக் அதிபர் போயிருக்கிறார்.

அவர் அத்தருணம் மன்னிப்பு கேட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது.

அலைகள் 13.10.2018

Related posts