டென்மார்க்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை கொழுத்துகிறது வெயில்

டென்மார்க் பாடசாலைகளுக்கு இலை உதிர்காலத்திற்கான ஒரு வாரகால விடுமுறை இன்று ஆரம்பித்துள்ளது.

குளிர் நிறைந்த பருவத்தின் ஆரம்பம் என்றாலும் இந்த வாரம் கோடைகாலம் போல கொழுத்துகிறது வெயில் இப்போது வெப்பம் 23 பாகை பரனைற் என்றால் பாருங்களேன்.

உண்மையில் இந்த விடுமுறை கோடை விடுமுறை போல குதூகலமாக இருக்கிறது என்கிறார்கள் சில பாடசாலை மாணவர்கள்.

விடுமுறையில் போவோர் வாகனங்களை எடுப்பதால் இன்று பகல் 11.00 மணி முதல் மாலை வரை வீதிகளில் வாகன நெரிசல் களைகட்டும் என்று போக்குவரத்து பிரிவு கூறுகிறது.

இதற்கிடையில் வெயிலை கண்டதால் வாகனங்களும் வெறி கொண்டு ஓடுவதை சாதாரணமாக காண முடிகிறது.

நேற்று வடக்கு சேலன்ட் பகுதியில் கார் ஒன்று 16 வயது இளைஞனை மோதிவிட்டு பறந்து போய்விட்டது.

சுழித்து மடக்கிய போலீசார் கோக்டால் என்ற இடத்தில் காரை விசாரிக்க முயன்றபோது கார் எகிறிப்பாய்ந்துவிட்டதாம்.

இளைஞனுக்கு முகத்திலும் காலிலும் எலும்புகள் முறிந்துவிட்டன, ஏதோ தாயாரே உயிராபத்து இல்லை.

போதையால் வாழ்க்கை பாதை மாறுவதை விட கார்களில் பாதை மாறி பாதசாரிகளை மோதுவது பெரும் தொல்லையாக இருக்கிறது.

சில நேரங்களில் கார்கள் போகும் வேகத்தைப் பார்த்தால் இது 40 கி.மீ மேல் ஓடக்கூடாத வீதியா இல்லை விரைவுச்சாலையா என்று சிந்திக்கத் தோன்றும்.

என்னதான் செய்யலாம்..

சிந்தித்தால் சிரிப்பு வரும்..
மனம் நொந்தால் அழுகை வரும்..

அலைகள் 13.10.2018

Related posts