பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 58.

சென்னையை சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி. இவர் கடந்த 2006-11-இல் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் அதிமுகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா காலமானதற்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்து பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்தும் விலகி டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

Related posts