தமிழகத்தில் இருந்து ரி.எஸ்.எஸ் மணி குழுவினர் வழங்கும் செய்திகளும் நிஜங்களும்

வின் டிவி 11 -10 --2018 செய்திகளும், நிஜங்களும் #ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் வழக்கு-விவரம் கொடு #உச்சநீதிமன்றம், நடுவண் அரசுக்கு, ரகசிய கவர் போட்டு கொடு என்றது #சபரிமலை நுழைவுக்கு பெண்களுக்கு ஏற்பாடுகள் சாத்தியமில்லை #கேரளா முழுக்க ஆர்ப்பாட்டம்-சேனனியிலும் இன்று-தீர்ப்பை எதிர்த்து #திதலி புயல் கரையைக் கடந்து சென்றது-- தப்பித்தது தமிழகம் #தாமிரபரணி புஷ்காரம் பாயாசம் -ஆளுநர் -துறவி மாநாடு தொடக்கம் #எம்.ஜே. அக்பர் விளக்க நிர்பந்தம்-வைரமுத்து விளக்கம் - #சித்தார்த், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ ரெட்டி சினமயிக்கு ஆதரவு -ராதாரவியும்? #தமழ் வளர்ச்சிக்காக்க புதிய இயக்கம்-"தமிழியக்கம்" பெயர் ஏற்கனவே ?? #பேரா.இளவரசு,பேரா.அரணமுறுவல்நடத்திய"தமிழியக்கம்"தொடர்ச்சி #ஓ.பி.எஸ்., போனார், ஸ்டாலின் எப்படி-தமிழியக்கம் ??? #முறையற்ற உணவு பழக்கம்--குழந்தைகளுக்கு ஆபத்து-- #நிதின்கட்கரி-ஆட்சிக்கு வரமாட்டோமென வாக்குறுதிகல் கொடுத்தோம் #சூரிய ஒளி மின்சாரத்துக்கு,மென்பொருள் இல்லை- தவறான செய்தி #கூட்டுறவு சங்கத் தேர்தல்…

‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு

நடிகைகள் பாலியல் தொல்லைகளை வலைத்தள ‘மீ டூ’ இயக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பிரபலமாக உள்ள பெரும் தலைகள் எல்லாம் இதில் உருள்கின்றன. இந்த நிலையில் ‘மீ டூ’ இயக்கத்தை ஐஸ்வர்யாராய் வரவேற்று உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “மீ டூ இயக்கம் நல்ல அறிகுறியாக தெரிகிறது. பெண்கள் உரிமைக்கான ஒரு தொடக்கமாகவே இதை பார்க்கிறேன். சில விஷயங்களில் சட்டப்படி தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். பெண்கள் குரல் இப்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. இதற்கு ‘மீ டூ’ போன்ற சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. நான் எப்போதுமே பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறேன். எனது கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறேன். உலகம் குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டது. எங்கே இருந்து பேசினாலும் சமூக வலைத்தளங்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்த்து விடுகின்றன. என்னை பொறுத்தவரை சர்ச்சையான விஷயங்களில்…

பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்

இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி. வாகை சூடவா படத்தில் பாடிய ‘சரசர சாரக்காற்று வீசும்போது சாரப்பார்த்து பேசும்போது’ பாடலும், சிவாஜி படத்தில் பாடிய ‘சஹானா சாரல் வீசுதோ’, ‘கிளிமஞ்சரோ’ பாடல்களும் அவருக்கு புகழை தேடித்தந்தன. மேலும் பல படங்களில் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி அவரது டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த…

ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் தப்பியது எப்படி?

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம் மூலம் தரையிறங்கினர். ஒட்டுமொத்த சூழ்நிலையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில், மனிதர்களை இட்டுச் செல்லும் விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ரஷ்யத் துணைப் பிரதமர் போரிசோவ் அறிவித்துள்ளார். கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர். இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய…

மனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ

நிதி தொழில்நுட்பத்தின் வருங்காலம் குறித்து அக்டோபர் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் உலகின் முதல் பெண் ரோபோ சோபியா பேசுகிறார். நிதித் தொழில்நுட்பத்தின் வருங்காலம், வளர்ச்சி குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள ஃபிண்டெக் வேலியில் அக்டோபர் 22 முதல் 26 வரை மாநாடு நடக்க உள்ளது. இதில் சோபியா கலந்துகொள்கிறார். அக்டோபர் 22-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஆந்திரா வரும் சோபியாவுக்கு, அன்றே செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் பொருத்தப்படும். முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட தலைப்புகளில் சோபியா உரை நிகழ்த்த உள்ளார். கலந்துரையாடலில் சோபியா அடுத்த நாள் மாநாட்டில் பேசும் சோபியா, நிதித்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், ஐடி அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இந்த விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொள்கிறார். சோபியாவை இயக்கும் பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், ரோபோவுடன் விசாகப்பட்டினம் வருகின்றனர். யார் இந்த…

இரண்டு மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார். மேலும் அனைத்து கட்சிகளம் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம்தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. சுதந்திரக் கட்சி தேர்தலை காலம்தாழ்த்துவதாக எவர் குற்றஞ்சாட்டினாலும் அது அவர்களின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் சுதந்திரக் கட்சி தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுயாதின தேர்தல் ஆணைக்குழுவுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன்

அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய,, பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் நாகநாதன், ஆகியோரை அரசியலமைப்பு சபையின் சிவில் பிரதிநிதிகளாக நியமிக்க பாராளுமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபைக்கு கடந்த 2015 இல் நியமிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன, விஜித ஹேரத், திலக் மாரப்பன, விஜேதாச ராஜபக்‌ஷ ஆகியோரினதும், சிவில் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தணி சிப்லி அஸீஸ், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான ராதிகா குமாரசுவாமி, சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன ஆகியோரின் பதவிக் காலங்கள் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த…

இரண்டாவது உலகத்தமிழ் நாடகவிழாவில் பாராட்டு பெற்ற டென்மார்க் நாடகம்

டென்மார்க்கில் நீண்ட காலமாக தமிழ் ஆசிரியையாக இருந்து வருபவர் சிறந்த கலைஞர் விருது பெற்ற தமிழ் ஆசிரியை திருமதி சிவகலை தில்லைநாதன் அவர்களாகும். தமிழ் மொழி மட்டுமல்லாமல் சமயம், நாடகங்கள், பட்டிமன்றங்கள், நடனம் என்று தனது மாணவர்களை சகல துறைகளிலும் தரமிக்கவர்களாக உருவாக்க கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக டென்மார்க் நாட்டில் அரும் பாடுபட்டு வரும் ஆசிரிய திலகம். சிறப்பாக டென்மார்க் பரடைசியா நகரில் இவருடைய தமிழ் வகுப்புக்கள் நடைபெற்று வந்தன, ஏராளம் விழாக்களை நடத்தி நாடகங்களை வழங்கியவர். தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உரையாடல் சிறப்பிற்கும் நாடகங்கள் மிக முக்கியம் என்ற அவருடைய கருத்து பல வெற்றி மாணவர்களை உருவாக்கியிருக்கிறது. புலம் பெயர் நாடொன்றில் தாயகம் போல பிள்ளைகள் வாயில் சிறந்த தமிழ் மொழி தங்கு தடையின்றி முழங்கிக் கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணமான ஒருவர் ஆசிரியை சிவகலை என்றால்…