வல்வை ஒன்றியம் டென்மார்க் கோடைகால ஒன்றுகூடல் ( புகைப்படங்கள் )

வல்வை ஒன்றியம் டென்மார்க்கின் கோடைகால ஒன்றுகூடல் கடந்த 06.10.2018 சனிக்கிழமையன்று மதியம் முதல் கேர்னிங் நகரில் உள்ள டுவகூஸ் இல்லத்தில் அமர்க்களமாக நடைபெற்றது.

வல்வை ஒன்றியம் டென்மார்க் வருடம் தோறும் கோடைகாலம் குளிர்காலம் ஆகிய இரண்டு பருவங்களிலும் ஒன்றுகூடல்களை சிறப்போடு நடத்தி வருகிறது.

ஊர் உணர்வுகளை பரிமாறுதல், உணவுகளை ஊர் முறையில் தயாரித்தல், ஊரில் உள்ள பொது அமைப்புக்களுக்கு உதவுதல் என்று பரந்துபட்ட பணிகளை செய்து வருகிறது இத்தாபனம்.

இந்த முறையும் வல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கான ஸ்மாட் ரூம் என்ற நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறையை அமைப்பதற்கு உதவி வழங்க இருக்கிறது.

சிறுவர் விளையாட்டுக்கள், ஒடியல்கூழ், வல்வை பலகாரங்கள் என்று விழா களைகட்டியது.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ..? என்ற வரிகளே ஒன்றுகூடலை பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. இதோ புகைப்படங்கள் சில..

அலைகள் 10.10.2018

Related posts