கறுப்பு ‘மேக்அப்’பில் நயன்தாரா

நயன்தாரா என்றாலே அவரது ஸ்லிம் தோற்றம், வசீகரமான முகம்தான் நினைவுக்கு வரும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து திகில் படமொன்றில் நடிக்கிறார்.

இதில் இரட்டை வேடம் ஏற்கிறார். ஒரு கதாபாத்திரத்தில் கவர்ச்சியான தோற்றத்திலும் மற்றொரு பாத்திரத்தில் கறுப்பு மேக்அப் அணிந்தும் நடிக்க உள்ளார்.

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்குகிறார்.

இதுபற்றி இயக்குனர் கூறியது: புதிய ஹாரர் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதில் இரட்டை வேடம் ஏற்கிறார்.

ஒரு கதாபாத்திரம் வழக்கமான தோற்றத்திலும், மற்றொரு கதாபாத்திரத்தில் கிளாமரை குறைத்துக்கொண்டு மாறுபட்ட தோற்றத்திலும் நடிக்கிறார்.

இதுவரை இதுபோன்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியதில்லை.

அயராவதம் என்ற ஒரு மாய தோற்ற யானையின் பின்னணியிலிருந்து உருவாகியிருக்கும் கதை. அந்த யானைதான் யானைகளின் ராஜாவாக கருதப்படுகிறது.

இது நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் கிடையாது. ஆனால் அந்த யானையின் பலம் இவருக்கு உள்ளது போன்ற கதாபாத்திரம் என்றார் இயக்குனர் சர்ஜுன்.

Related posts