‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் ஹீரோ..

‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டில் வென்ற செந்தில் கணேஷ், ‘கரிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர் செந்தில் கணேஷ். மக்கள் இசைக் கலைஞரான இவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய வெற்றி, மக்கள் இசைக் கலைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல், உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏகப் பிரபலம். அந்தப் பாடல், பிரபுதேவா – நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யூ டியூபில் அந்தப் பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

‘சின்ன மச்சான்’ பாடலை எழுதியவர், செல்லத் தங்கையா. செந்தில் கணேஷின் குரு இவர்தான். இவர் ஏற்கெனவே செந்தில் கணேஷை ஹீரோவாக வைத்து ‘திருடு போகாத மனசு’ என்ற படத்தை இயக்கி, வெளியிட்டுள்ளார். அதற்கடுத்து ‘கரிமுகன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

“முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, முகம் தெரிந்த இரண்டு பேருக்குள் என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது? அதில் இருந்து எப்படி அவர்கள் வெளியே வந்தார்கள்?” என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தக் கதையை கமர்ஷியல் காமெடியாகச் சொல்லியிருக்கின்றனர்.

செந்தில் கணேஷ் ஜோடியாக, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் நடித்துள்ளார். எலக்ட்ரீஷியனாக செந்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய கேரக்டர் பெயரும் செந்தில் தான். புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Related posts