வின் தொலைக்காட்சி வழங்கும் செய்திகளும் நிஜங்களும்

Win TV 09-10-2018 News and Views \#இன்று சே குவேரா நினைவு நாள்.மருத்துவர்-கியூபா விடுதலை. #தென் அமெரிக்க நாடுகளின் விடுதலை--அர்ஜென்டைனா, பொலிவியா #இலங்கை சிங்கள இளைஞர்களின் போர்-ஜே.வி.பி.-1971 ல் # ட்ரைகான்டினென்டல் " என்ற சே குவேரா வழி புத்தகம் "நகர்ஆயுத போர்" #நேற்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்..இளம் வயது #சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. #முதல்வர் பினராய் விஜயன்-உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பேச்சு #ஒற்றுமையை சீர்குலைக்க போராட்டம் நடுத்துபவர்கள் சதி #இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது? #மனோ கணேசன் புலிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக்க.. #ஜே.வி.பி. போல, புலிகளும் சட்டரீதியாக இயங்க வரலாம் என வழக்கு #தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் செய்யவேண்டும்-டி.என்.ஏ. #சுமந்திரனை மனதில் வைத்துப் பேசுகிறாரா மனோ கணேசன்? #சென்னை வெள்ளத் தடுப்புக்கு…

ரஜினி கட்சியில் சேர முடிவா? நடிகை குஷ்பு விளக்கம்

ரஜினி கட்சியில் சேர முடிவா? என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். குஷ்பு தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000–களில் முன்னணி கதாநாயகியாக இருந்து பிறகு 2010–ல் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். அந்த கட்சியில் முன்னணி பேச்சாளராக செயல்பட்ட அவர் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தார். அதன்பிறகு தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் யார் என்பதில் சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளாகி அவரது வீட்டில் கல்வீச்சும் நடந்தது. இதனால் தி.மு.க.வை விட்டு விலகி காங்கிரசில் இணைந்தார். இப்போது அந்த கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். சமீபத்தில் காங்கிரசில் இருக்கும் நக்மாவுக்கும், குஷ்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் பரவின. இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததும் குஷ்பு அவரது கட்சியில் இணைந்து விடுவார் என்றும் கொள்கை பரப்பு…

கருணாகரனுடன் ரசிகர்கள் மோதல்

நகைச்சுவை நடிகர் கருணாகரனுடன் விஜய் ரசிகர்கள் மோதல் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறது. நடிகர் விஜய் ‘சர்கார்’ பட விழாவில் பேசும்போது, ‘‘நான் முதல்–அமைச்சர் ஆனால் உண்மையாக இருப்பேன். லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்’’ என்று கூறினார். அதோடு ஒரு குட்டி கதையையும் சொன்னார். விஜய் பேச்சு பற்றி கருத்துக் கூறிய நகைச்சுவை நடிகர் கருணாகரன், ‘‘அரசியல்வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்த கதை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா? அல்லது நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என்று ரசிகர்களிடம் சொல்லிப்பாருங்கள் அவர்கள் கேட்கிறார்களா? என்று பார்ப்போம்’’ என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருணாகரன் ஆந்திராக்காரர் என்றும் விமர்சிக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த கருணாகரன் நான் ரெட் ஹில்ஸ் அருகில் உள்ள பாடியநல்லூரில் பிறந்தேன். நான் தமிழகத்தை சேர்ந்தவனா? என்று…

‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் ஹீரோ..

‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டில் வென்ற செந்தில் கணேஷ், ‘கரிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர் செந்தில் கணேஷ். மக்கள் இசைக் கலைஞரான இவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய வெற்றி, மக்கள் இசைக் கலைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல், உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏகப் பிரபலம். அந்தப் பாடல், பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யூ டியூபில் அந்தப் பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர். ‘சின்ன மச்சான்’ பாடலை எழுதியவர், செல்லத் தங்கையா. செந்தில் கணேஷின் குரு இவர்தான். இவர் ஏற்கெனவே செந்தில் கணேஷை ஹீரோவாக வைத்து ‘திருடு…

‘தங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு

தங்கல் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆமிர் கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படம், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன் மகள் மூலம் நனவாக்கிக் கொள்ளும் தகப்பனைப் பற்றிய கதை இது. மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், உலக அளவில் அதிகம் வசூலித்த இந்தியப் படங்களின் வரிசையிலும் இடம்பிடித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு நிதேஷ் திவாரி இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த படத்துக்கு ‘சிச்சோர்’ என்று தலைப்பு வைத்துள்ளார் நிதேஷ் திவாரி. ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியாக நடித்த சுஷந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்க, ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதில்…

நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது

ஆளுநர் மீது அவதூறு செய்தி பரப்பியதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர். தற்போது சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். --------------- நக்கீரன் கோபாலைக் கைது செய்திருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதி என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.…

டென்மார்க்கில் பாவித்த பொருட்களை வாங்குவது உயர்கிறது

டென்மார்க்கில் உள்ள மக்களிடையே பாவித்த பொருட்களை வாங்கும் பழக்கம் ஒரு புதிய கலையாக உயர்ந்து வருவதாக இன்றைய காலை பொருளாதார செய்தி தெரிவிக்கிறது. கடந்த 12 மாதங்களில் 7.2 பில்லியன் குறோணர்களுக்கு பாவித்த பொருட்கள் விற்பனையாகியுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு பெரிய விற்பனையாகும். பாவித்த பொருட்களை விற்கும் கடைகள், வீதிகள் தோறும் அவ்வப்போது போடப்படும் லொப்ப மாக்கற் எனப்படும் ஒரு நாளைக்கான பாவித்த பொருட்களின் விற்பனை சந்தைகள் என்பன இந்த விற்பனையில் முக்கியம் பிடிக்கின்றன. டேனிஸ் மக்களிடையே பாவித்த பொருட்களை வாங்கும் பழக்கம் 2016 ல் 59 வீதமாகவும் 2017 ல் 63 வீதமாகவும் 2018ல் 68 வீதமாகவும் உயர்வு கண்டுள்ளது. இன்றுள்ள நிலையில் ஒவ்வொரு மூன்று டேனிஸ்காரருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் பாவித்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் கொண்டுள்ளனர். உடைகள், விளையாட்டு பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட…

புவியை வெப்பமாக்காத புதிய கார்கள் டென்மார்க்கில்

நேற்று முன்தினம் வெளியான ஐ.நா காலநிலைப் பிரிவின் அறிக்கை புவியை மனிதர்கள் வெப்பமாக்கும் அளவு கூடிவிட்டதாக எச்சரித்திருந்தது. புவி சூடாகும் வேகமானது கடந்த 2015 பாரீஸ் பருவநிலை மாநாட்டு தீர்மானத்தை மீறிய வேகமாக இருப்பதாக அது அறிவித்ததும் தெரிந்ததே. இந்த பிரகடனத்தை மதித்து டென்மார்க் தன்னளவில் புதிய யோசனைகளை இன்று பகல் 10.30 மணிக்கு முன்வைக்கிறது. இதன்படி டீசல், பெற்றோல் கார்களின் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இவற்றுக்கு பதிலாக மின்சாரத்தில் ஓடும் கார்கள் முக்கிய இடம் பிடிக்க இருக்கின்றன. எதிர்வரும் 2030 உடன் புதிதாக பெற்றோல் டீசல் கார்களை விற்கும் முறை நிறுத்தப்படுகிறது. 2025 ற்கு பின் வாடகைக்கார், பேருந்து போன்றன பெற்றோல் டீசலில் ஓடுவனவாக இருந்தால் அரசில் பதிவு செய்ய முடியாது. நான்கு இலட்சத்திற்கு குறைந்த மின்சார வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரிச்சலுகை, மேலும்…

செல்வி. சப்தகி பாலேந்திரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நோர்வேயில்

கடந்த சனிக்கிழமை 6ம் திகதி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவை அண்டியுள்ள லில்லஸ்ரொம் கலையரங்கில் செல்வி சப்தகி பாலேந்திரனின் அரங்கேற்றம் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. நித்திய பரத ஜோதி யாழினி பா. பாலேந்திரனின் அரங்கேற்றம் கண்ட மாணவிகளின் வரிசையில் ஒன்பதாவது அரங்கேற்றம் இதுவாகும். மேலும் டென்மார்க்கில் இருந்து நோர்வேக்கு மாறியுள்ள நடன ஆசிரியை நோர்வேயில் நடத்தும் முதலாவது பிரமாண்டமான அரங்கேற்றம் இதுவாகும். இந்த நிகழ்விற்கு வாத்திய கலைஞர்கள் உட்பட உலகின் பல பாகங்களில் இருந்தும் பெருந்தொகையான கலைஞர்கள் வருகை தந்திருந்தனர். சிறப்பாக டென்மார்க்கில் இருந்து நூற்றுக்கணக்கானோர் விமான வழியாக வந்தடைந்திருந்தனர். அனைவரையும் உரிய முறையில் வரவேற்று யாதொரு தடங்கல் தாமதங்கள் எதுவும் இல்லாமல், சிறந்த நிர்வாக ஒழுங்குடன் நிகழ்வு நடைபெற்றதானது தமிழ் சமுதாயம் மிக வேகமாக முன்னேறி வருவதன் அடையாளமாகவும் இருந்தது. இப்படியான பாரிய நிகழ்வுகளை எல்லோரும் நடத்த…