சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்

செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன. கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மோகன்லால் பிரதமர் தோற்றத்தில் இருப்பதுபோன்ற படமும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தி வாசகங்களுடன் மோகன்லால் பிரதமர் வேடத்தில் இருக்கும் பேனர் மற்றும் அதன் அருகில் சூர்யா கோட் சூட்டில் மிடுக்காக நடந்து செல்வது…

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இயக்குநர் மகேந்திரன்

ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ படத்தில், இயக்குநர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி. தற்போது…

நடிகை கங்கணா ரணாவத் பாலியல் புகார்

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா அண்மையில் பாலியல் புகார் கூறினார். படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக மும்பை போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை (மேற்கு) கூடுதல் ஆணையர் மனோஜ் குமார் சர்மா தெரிவித்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகை கங்கணா ரணாவத்தும், தனுஸ்ரீ-க்கு ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கங்கணா ரணாவத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தனுஸ்ரீயின் துணிச்சலை பாராட்டுகிறேன். பாலிவுட்டில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்த்து பெண்கள் துணிச்சலாகப் போராட வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டில் நான் நடித்த 'குயின்' படம் வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் விகாஸ் பகால். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் தனது ஆசைக்கு பல்வேறு பெண்களை பலிகடாவாக்கினார்.…

28 ஆண்டுகள் சிறைவாசம்: மீண்டும் மனைவியுடன்

தமிழகத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த நபர், 28 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி தன் மனைவியுடன் மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த, அதாவது, தன் வாழ்வின் 28 ஆண்டுகளை சிறையில் கழித்த சுப்பிரமணியன் (63) என்பவர், வேலூர் மத்திய சிறையில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுதலையானார். அவரது மனைவி விஜயா (60), சிறையிலிருந்து வெளியே வந்த தன் கணவரை வரவேற்றார். விஜயாவும் சிறையில் இருந்தவர் தான். அவர் 2013 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையான போது, அவரே தமிழகத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவராக கருதப்பட்டார். அதிக காலம் சிறையில் இருந்த கணவன் - மனைவி ஒன்றாக இணைந்தது சுவாரஸ்யமான நிகழ்வாக கருதப்படுகிறது. கோவை மாவட்டம் சூலூரில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தம்பதியர் இருவருக்கும்…

பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்

அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் றேங்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 31 ஆவது ஆண்டு நிறைவுநாள் கிரக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,இந்த நாட்டில் யுத்த குற்றம் இழைத்தவர்கள் சுதந்திரமாக உலாவரும் நிலையில் மக்களின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் சிறைகளில் வாடுகின்றார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கி அவர்கள் அனைவருக்கும் நாம் மதிப்பளிக்கும் அதேவேளை அவர்களின் விடுதலைக்காக பாடுபட வேண்டிய…

புற்றுநோயை வெற்றி கொள்ளும் நாள் தொலைவில் இல்லை!

அபரிமிதமாக வளர்ந்த விஞ்ஞானம் மருத்துவத் துறையில் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இருந்தும் உயிர்கொல்லி நோய்கள் உட்பட எத்தனையோ நோய்களுக்கு இன்றும் சிகிச்சையில்லை என்பதே உண்மை. அதிலும் புற்றுநோய்க்கு இன்றும் நிரந்தரத் தீர்வு இல்லை. புற்றுநோய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதுடன், தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தருகிறது. இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையில் முற்றிலும் புதுவகையான வழிமுறையைக் கண்டறிந்த ஜேம்ஸ் அலிசன், டசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் அலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக அண்டர்சன் புற்றுநோய் நிலையத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர். டசுக்கு ஹோன்ஜோ ஜப்பானைச் சேர்ந்தவர். அவர் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களின் புரதச் சத்தைப் பல்கிப் பெருகச் செய்து, நம் உடலின்…

கடுகதி ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர கடுகதி ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள அசேலபுர – பிள்ளையாரடியில் இடம்பெற்றுள்ளது. கடுகதி ரயில் வெலிக்கந்தைப் பகுதியைக் கடக்கும்போது காட்டுக்குள் இருந்து புகையிரதப் பாதையைக் கடக்க முற்பட்ட யானைகளே இந்த விபத்தில் சிக்கி கால்கள் துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. இவ்விபத்து காரணமாக விபத்துக்குள்ளான ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைகளின் உடல்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கும் தடம்புரண்ட பெட்டிகளைப் பழுது பார்ப்பதற்கும் புகையிரதப் பாதையை சீர்செய்வதற்குமான பணிகளைப் புகையிரதத் திணைக்கள அதிகாரிகளும் வன இலாகா அதிகாரிகளும் மேற்கொண்டிருந்தனர்.

சஜித் பிரேமதாச செயற்றிறன் மிக்க அமைச்சர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர் சஜித்தை, “செயற்றிறன் மிக்க அமைச்சர்” எனப் புகழ்ந்துள்ளார். அதேபோன்று, அமைச்சர் சஜித் போன்ற இளந்தலைவர்கள், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு கை கொடுக்க வேண்டும் எனவும், இதன்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி - மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட “நாவலர் கோட்டம்” எனும் மாதிரிக் கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்ற போதே, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித்தின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச, வீடமைப்புத் தொடர்பில் ஆற்றிய சேவைகளை ஞாபகப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவரை நினைவு கூருவதாகக்…

விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விஜயகலா மகேஷ்வரனை ஆஜர்படுத்திய போது, அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளதோடு, குறித்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஷ்வரன் இன்று (08) காலை கைது செய்யப்பட்டார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை…