காங்கோ நாட்டில் வாகனம் மீது எண்ணெய் லாரி மோதல்: 50 பேர் பலி; 100 பேருக்கு தீக்காயம்

காங்கோ நாட்டில் நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். 100 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

காங்கோ நாட்டில் கின்சாசா நகரின் மேற்கே 120 கி.மீ. தொலைவில் கிசான்டு நகர் அருகே நெடுஞ்சாலையில் எண்ணெய் லாரி ஒன்று இன்று சென்று கொண்டு இருந்துள்ளது.

அதிகளவில் சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் எண்ணெய் லாரிகள் இந்த நெடுஞ்சாலை வழியே செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதி திடீரென விபத்திற்குள்ளானது.

இதனை அடுத்து எழும்பிய நெருப்பு பிழம்புகள் அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவின. இந்த சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 100 பேர் தீக்காயங்களுடன் போராடி வருகின்றனர்.

Related posts