பிரபாகரனாக நடிக்கும் பாபிசிம்ஹா

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஸ்டூடியோ 18 நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் நடிகர் பாபி சிம்ஹாவை பிரபாகரன் வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குகிறார் வெங்கடேஷ் குமார்.

இலங்கை இறுதிபோரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தை அவர் ஏற்கனவே இயக்கியுள்ளார். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. பாபி சிம்ஹா தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

Related posts