இந்திய ரூபாய் மதிப்பு உடைக்கப்பட்டது

கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.77 ரூபாயாக சரிந்தது.

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ,

பிரேக்கிங்: ரூபாய் சரிவு 73.77. அது உடைந்து இல்லை – அது உடைக்கபட்டது என கூறி உள்ளார்.

Related posts