ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகிறார். நாளை டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா, ரஷ்யா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

அப்போது ரூ.36,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் ஓப்பந்தம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தப்படுகிறது. எஸ்-400 ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 300 இலக்குகளை அடையாளம் காணும், ஒரே நேராத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது.

மேலும், அடுத்த மாதம் 18-ம் தேதி இருநாட்டு ராணுவங்களும் உத்தரப் பிரதேசத்தில் கூட்டு போர் பயிற்சி மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபினா நகரில் நவ.18 தொடங்கி, 28ம் தேதி வரைநடக்கும் இந்த கூட்டு போர் பயிற்சியில் ரஷ்யாவை சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related posts