நோர்வேயில் சப்தகி பாலேந்திரனின் மகத்தான பரத நாட்டிய அரங்கேற்றம்

டென்மார்க்கின் புகழ் பெற்ற நடன ஆசிரியை நித்திய பரத ஜோதி யாழினி பா. பாலேந்திரனின் மாணவியும் அருமைப் புதல்வியுமான சப்தகி பாலேந்திரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர் வரும் சனிக்கிழமை 06.10.2018 மாலை 17.00 மணியளவில் நோர்வே நாட்டில் இடம் பெறவுள்ளது.

நடைபெறும் இடம் நோர்வேயின் தலை நகர் ஒஸ்லோவில் உள்ள புகழ் பெற்ற கலாச்சார இல்லமாகும்.

நடன ஆசிரியை யாழினி பா. பாலேந்திரன் டென்மார்க்கில் முதன் முதலாக பரத நாட்டிய அரங்கேற்றம் செய்தவர், டென்மார்க்கின் பிரபல நடன ஆசிரியை மகாலட்சுமி சத்தியமூர்த்தி அவர்களிடம் பரதத்தை கற்றவர். முன்னதாக புகழ் பெற்ற நடன ஆசிரியை லீலா ஆறுமுகையாவிடமும் பின் தமிழகத்திலும் பரதத்தை சிறப்புடன் கற்று மெருகேற்றியவர்.

கற்ற கலையை கைவிடாது தொடர்ந்து சுடர்விட வைக்கும் நித்திய பரத ஜோதி.

இவருடைய கை வண்ணத்தில் டென்மார்க்கில் பல மாணவிகள் அரங்கேற்றம் கண்டு இன்றைய நடனம் என்ற கலைத்துவ நீல வானிலே அழகான நடனத்தாரகைகளான மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட கலைஞர்கள் வாழ்வது நாட்டிற்கு பெருமைய ன்றோ..?

எப்போதுமே பரத நாட்டிய அரங்கேற்றங்களை நடத்தும் போது நித்திய பரத ஜோதி யாழினி. பா. பாலேந்திரன் அவர்கள் புதுபுதுப்புது உத்திகளை கையாண்டு சபையை அசத்துவதில் பெயர் பெற்றவர். தரங்கம் என்ற கடுமையான நடன வடிவத்தையே அரங்கேற்றங்களில் வழங்குமளவுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொண்ட இளம் நடன ஆசிரியை.

அதுமட்டுமல்ல அரங்கேற்றம் காணும் சப்திகியின் தந்தையார் சிறந்த கலைஞர், அதி சிறந்த நிர்வாகியாகவும் இருப்பவர். பல கலை நிகழ்ச்சிகளை வழங்கிய சிறந்த தாளவாத்திய கலைஞர். இத்தகைய கலைத்தம்பதியரின் மகளின் அரங்கேற்றம் என்பதால் அது கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.

மேலும் டென்மார்க்கில் இருந்து நோர்வேயில் குடியேறி யாழனி பா. பாலேந்திரன் வழங்கும் முதல் அரங்கேற்றம் என்பதால் வரலாற்று முக்கியமான நிகழ்வாக தெரிகிறது.

புகழ் பெற்ற கலைஞர்கள் எல்லாம் அன்றைய நிகழ்வில் பங்கேற்கிறார்கள். சப்தகி நடனத்தில் மட்டுமல்ல பாடலிலும் சிறந்த சாதனையாளராகும். பல் துறை ஆற்றல் பெற்ற ஒரு தாரகையின் பொன்னான புகழ் மிக்க பரத அரங்கேற்ற நிகழ்வு இது.

அன்றைய தினம் வழமைபோல பரத நாட்டிய அரங்கேற்ற வர்ணத்தில் பல சாகசங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆசிரியையுடைய அரங்கேற்றங்களை தொடர்ந்து அவதானிப்போர் அதைப் புரியலாம். அதே போல ஆடை அலங்காரம் மேடை அலங்காரங்கள் முதற் கொண்டு அனைத்தும் நேர்த்தியாக இடம் பெறுவதுண்டு.

கலை வந்த விதம் கேளு கண்ணே – உடல்
கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே..!
உள்ளத் துடிப்பினில் தாளம் உருவானது – மன
உணர்ச்சியிலே சுருதி இலயமானது..
தௌ;ளுத் தமிழ் குழந்தை வடிவானது.. – அழகு
தித்தித்தை என்று மனம் சதுராடுது..
கலை வந்த விதம் கேளு கண்ணே – உடல்
கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே..!

அலைகள் 03.10.2018

Related posts