நடிகர் விஜய் கூறியது சரிதான் என்று டி.ராஜேந்தர்

நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று நடிகர் விஜய் கூறியது சரிதான் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியபோது ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறியதோடு ஒரு சர்கார் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் டி.ஆர். ராஜேந்தரின் பிறந்தநாளான இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விஜய் சொன்ன மாதிரி நாட்டில் ஊழல், லஞ்சம் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா.தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா? என்ற கேள்விக்கு , அவர் சொன்னது சரி. நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தலையும் பூவும் சேர்ந்தால் தான் நாணயம் செல்லும். தலைமை சரியில்லாத எந்த ஆட்சியும் செல்லாது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் எல்லாம் இன்று தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா?. எல்லாம் அம்மா வாங்கி வச்ச ஓட்டை வைத்து…

ஒருத்தன் வருவான், அவன் லீடரா மாறுவான்..!

நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான், அவன் லீடரா மாறுவான், அவன் தான் தலைவன் என சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சியுள்ளார். சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இது ரசிகர்களின் சர்கார் என்பதை நிரூபிக்கும் விதமாக டிஜிட்டல் முறையில் ரசிகர்களுடன் சேர்ந்து ஆடியோ வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன் சிம்டாங்காரன் பாடல் குறித்த சுவாராஸ்யமான விஷயத்தை பகிர்ந்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரின் சியிஓ பாடல் தயாராகிவிட்டது என சொன்னதும், பாடலைக் கேட்டுவிட்டு வரிகள் புரியவில்லை என்றாராம்,. அதற்கு சியிஓ, அது டம்மி லிரிக்ஸ் என்று சொல்லியிருக்கிறார். பிறகு கடந்த வாரம் அதேபாடலை ப்ளே செய்து காட்டியதும், அப்படியே இருந்ததால் லிரிக்ஸ் வேண்டும் என கேட்டு படித்து பார்த்ததாகவும் சிறப்பாக விவேக் எழுதியுள்ளதாகவும் பாராட்டினார். ஒருமுறை…

2018ம் ஆண்டு வேதியல் நோபல் பரிசு 3 பேருக்கு

2018ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது நேற்று இயற்பியலுக்கான நோபல் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜிரார்டு மவ்ரு , மற்றும் கனடாவைச் சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட். ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு…

பரியேறும் பெருமாள்’ படக்குழுவை வாழ்த்திய கமல்

பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார் கமல்ஹாசன். மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித், தன்னுடைய ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. கதிர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி ‘பரியேறும் பெருமாள்’ ரிலீஸானது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே, படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சினிமா ரசிகர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்துள்ளான் ‘பரியேறும் பெருமாள்’. இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். “நண்பர்கள் பலர் போன்செய்து படத்தைப் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரும் இந்த முயற்சியையும் பயிற்சியையும்…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 1000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திலுள்ள மவுண்ட் சோபுடன் எரிமலை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையுடன் வெடிக்கத் தொடங்கியது. இதுகுறித்து இந்தோனேசிய அறிவியலாளர்கள் தரப்பில், "கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்த எரிமலை வெடிப்பைத் தூண்டி விட்டிருக்கலாம். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே அதன் நடவடிக்கைகள் வெடிக்கும் வண்ணம் இருந்தன” என்று கூறியுள்ளனர். மவுண்ட் சோபுடன் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்தோனேசியாவைப் பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் 130 எரிமலைகள் உள்ளன. முன்னதாக, இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து…

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் விஜயகாந்த் 17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார். 19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில்…

ரோஹிங்கியா பிரச்சினை இந்தியாவால் மட்டுமே தீர்க்க முடியும்

ரோஹிங்கியா விவகாரத்தில் வங்கதேசத்துடன் இணைந்து மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்யாக்கள் தப்பி, வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். வங்கதேசம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் நாட்டின் செயல்பாடு சிறுபான்மை மக்களை அழிக்கும் செயல் என ஐநா விமர்சித்து வருகிறது. மியான்மருக்கு எதிராக பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதனை பற்றி கவலையின்றி மியான்மர் நாடு தொடர்ந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று ஐநா…

எம்ஜிஆர் போல் நினைத்து சர்க்கஸ் காட்டுகிறார் விஜய்

தம்பி விஜய் எம்ஜிஆர் போல் தன்னை நினைத்துக் கொள்கிறார். முதல்வராகப் படத்தில் நடிக்கலாம், முதல்வராக செயல்படுவது எளிதல்ல என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயகுமார் கிண்டலாக பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி வருமாறு: “அரசியலில் எப்போது குதிக்கலாம் என்று விஜய் பார்க்கிறார். அவரும் குதிக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவே இல்லை. அவரது அப்பாவும் வலையெல்லாம் போட்டு வைத்து, குதிப்பா நான் பார்த்துக்கிறேன்னு சொல்கிறார். ஆனால் விஜய் குதிப்பதற்குப் பயப்படுகிறார். இப்போது அவருக்குத் தைரியம் இருந்தால் குதிக்கட்டும். அடிபடாமல் இருந்தால் மகனே உன் சமத்து. விஜய்க்கு அரசியல் தெரியவில்லை. ஏதோ சில ரசிகர்கள் வந்தால் அவர் தன்னை எம்ஜிஆர்போல் நினைத்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் ஒரு அரசியல் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. யார் வந்தாலும் அதிமுக அரசைக் குறை சொன்னால் அவர்கள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இது…

ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித

ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல புதிய தகவல்கள் விசாரணையின் போது தெரியவந்துள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் முற்றாக முடியும் வரை அரசாங்கம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடப்போவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஊழலிற்கு எதிரான அமைப்பின் இயக்குநர் நாமல்குமாரவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று நாமல்குமார முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் உரையாடியமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் விசாரணைகளில் தலையிடாது அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12,000 பேரை விடுவித்து 100 பேரை சிறையில் ..?

தமிழ் அரசியற் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுக்கான நீதியை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறதே தவிர அரசைப் பணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்று அரச தரப்பினர் குற்றம் சாட்டுவது தவறு எனத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியற் கைதிகள் தமது விடுதலைக்காக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக அவர்களது விடுதலையை வலியுறுத்தி தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் தமது ஆதரவை மனப்பூர்வமாக தெரிவிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக கட்சியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ளன. யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய தளபதிகள்,…