செக்கச் சிவந்த வானம் பணம் உழைக்க போட்ட லைக்கா திட்டம் வெற்றி

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. முக்கிய நடிகர்கள் பலரை இணைத்த காரணத்தால் அப்படம் முதல் நாள் விஜய் படம் போல அரங்கு நிறைந்து கிடந்தது.

இன்று ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், நடிகைகளுக்கும் இருக்கிறார்கள். இவர்களுடைய படங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரங்கு நிறையும் என்று மணிரத்தினம் போட்ட கணக்கும், லைக்கா போட்ட கணக்கும் சரி.

அனுபவ ரீதியான வர்த்தக தந்திரத்தில் விட்ட முதலை இக்கூட்டணி ஏதோ ஒரு வகையில் உழைக்க வழியிருக்கிறது.

இன்றுள்ள நிலையில் ஒரு படம் விட்ட பணத்தை உழைத்தால் அதுவே போதுமானது. மற்றப்படி தர்ம நியாயம் எதுவுமே கிடையாது என்ற கோணத்தில் பார்த்தால் இந்த முயற்சி சரியானதே.

உதாரணமாக..

ஜோதிகாவுக்கு பெண்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது அவர்களை குறிவைத்து ஜோதிகா இறக்கப்பட்டுள்ளார்.

விஜய் சேதுபதியும் கணிசமான கூட்டத்தை கூட்டும் ஆற்றல் உள்ளவர். இவர்போல சிம்புவுக்கும் சிறிய அளவில் ரசிகள்கள் உண்டு. அரவிந்தசாமியும் அருண்குமாரும் அப்படியே. இவர்களை கூட்டி கணக்கு போட்டுள்ளனர்.

இசைக்கு ஏ.ஆர் ரஹ்மான், வில்லன் பிராகாஷ்ராஜ், தியாகராஜன் என்று ஒரு நடிகர் பட்டாளமே இறக்கப்பட்டிருப்பதால் படம் சொதப்பினாலும் இவர்களை பார்க்க கூட்டம் வருமென லைக்கா போட்ட குறி சரியானது.

மூன்றே நாட்களில் இன்றைய படங்களின் வர்த்தகம் முடிந்துவிடும். விஜய் நடித்தால் வரும் கூட்டத்தை மற்றைய நடிகர்களை இணைத்து வைத்து கூட்டும் ஒரு முயற்சி இது.

தரமான பண்டத்தை விற்று வருமானம் பார்த்தது ஒரு காலம், போலி பொருட்களை விற்று ஏமாற்றி வருமானம் பார்ப்பது இந்தக்காலம்.

அப்படி ஒரு வருமானம் வந்தால் போதும் என்ற கொள்கையில் பார்த்தால் இந்த இந்த போலிப் பொருள் விற்பனை முயற்சி வர்தக ரீதியாக வெற்றி முயற்சியாகவே உள்ளது.

அலைகள் 30.09.2018 ஞாயிறு

Related posts