யாழ். மாந­கர சபையில் மோச­டி­

சபை பொறுப்­பேற்­கப்­பட்ட பின்­னர் நடை­பெற்ற ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான பட்­டி­யல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதை ஆராய்ந்த மேயர் அனைத்­துக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் முழு­மை­யான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் 6 ஆவது அமர்வு மேயர் இ.ஆர்னோல்ட் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே இந்­தப் பட்­டி­யலை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வின் தலை­வர் ராஜீவ்­காந்­தால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. பட்­டி­ய­லைச் சமர்ப்­பித்த அவர் தொடர் நட­வ­டிக்­கைக்­குப் பரிந்­து­ரைக்­கு­மா­றும் வலி­யு­றுத்­தி­னார்.

முறை­யற்ற ஆளணி நிய­ம­னம், இலஞ்­சம் பெற்­றமை, சட்­ட­வி­ரோத இறைச்சி விற்­பனை, முறை­யற்ற களஞ்­சி­யப் பதி­வு­கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டன.

நல்­லூர் ஆலய திரு­வி­ழாக் காலங்­க­ளுக்­காக சபை அனு­ம­தி­யு­டன் தற்­கா­லிக தொழி­லா­ளர்­கள் 40 பேர் மாந­கர சபை­யில் உள்ள தொழி­லா­ளர் சங்­கத்­தால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இவர்­க­ளின் 12 பேரி­டம் சிறு தொகை பணம் பெறப்­பட்டே அந்­தச் சங்­கத்­தால் பணிக்குச் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அந்­த 12 பேரி­ட­மும் மாந­கர சபை­யின் தொழிற் சங்­கம் பகுதி பகு­தி­யாக 42 ஆயி­ரம் ரூபாவை நிய­ம­னம் பெற்­றுக் கொடுத்­த­மைக்­காக இலஞ்­ச­மாக பெற்­றுள்­ள­னர். அந்த 12 பேரும் மாந­கர பிரதி மேஜர் ஈசன் முன்­னி­லை­யில் இதை எழுத்து மூல­மாக இலஞ்ச ஊழல் குழு­வி­டம் ஒப்­புக் கொண்டு கையப்­ப­மிட்­டுள்­ள­னர்.

மாந­கர சபை­யின் களஞ்­சி­யத்­தில் உள்ள பதி­வேட்­டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கண்­டா­வளை மண்­ணின் அள­வுக்­கு அதி­க­மாக 12 உழவு இயந்­திரம் மேல­தி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. அங்­குள்ள இரும்பு குழாய் (பொக்ஸ் பார்) களஞ்­சிய இருப்­பில் இருந்து 24 குறைந்­துள்­ளது என தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தக் குற்­றச் சாட்­டுக்­கள் தொடர்­பில் உரிய விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­ப­டும் பட்­சத்­தில் பார­பட்­சம் இன்றி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் என்று மேயர் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற 132ஆவது அமர்­வில், மாகா­ண­ச­பைக்கு உட்­பட்ட ஊழல் மோச­டி­களை விசா­ரிக்க சபை உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related posts