சரத் பொன்சேகா CIDயில் வாக்குமூலம்

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்ப்பட்ட சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொலிஸ் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி உள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடம், சுமார் 4 மணிநேர வாக்குமூலத்தை CID யினர் பதிவு செய்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அவரது இல்லத்தில் வைத்து சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் சிஐடியினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு, சபாநாயகர் கருஜயசூரியவிடமும் அது தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008, மே 22 ஆம் திகதி, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு, உதவி, ஒத்தாசை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டு, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, கடந்த 10 ஆம் திகதி சுமார் ஐந்து மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Related posts