அலைகள் வாராந்தப் பழமொழிகள் 26.09.2018 புதன்

01. பத்தாயிரம் தடவைகள் தோல்வியடைந்த தாமஸ் அல்வா எடிசன் கடைசியில் நான் தோல்வியடையவில்லை என்றார். தான் தோல்வியடைந்த 10.000 வழிகளும் பயன்தராது என்பதை தன் தோல்விகளால் கண்டறிந்தாகக் கூறுகிறார்.

02. ஒவ்வொரு தோல்வியும் பயன்படாத விடயங்களை அடையாளம் காட்ட உதவுகிறது.

03. பிரிட்டனுடன் போர் செய்ய இரவோடு இரவாக கப்பல்களில் சென்று இறங்கினான் சீசர். அடுத்து அவன் செய்த வேலை தாம் வந்த கப்பல்களை கொழுத்தியதுதான். பின்னர் சொன்னான் தப்பியோட வழியில்லை.. வெற்றி அல்லது வீர மரணம் என்றான். அந்தப் போரில் சீசர் வென்றான்.

03. உங்களுக்கு பின்னால் உள்ள பாலங்களை அனைத்தையும் எரித்துவிடுங்கள். பின்வாங்க இயலாத நிலை வரும்போது எப்படி நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்று பாருங்கள்.

04. ஒருவனை சிறந்த மனிதனாக்க இயற்கை பல சோதனைகளை தருகிறது. களிமண்ணை பிசைந்து சிலையை உருவாக்குவது போல அது துயரம் தரும்.

05. எப்போதுமே ஒரு தெய்வீக சக்தி வந்து தோல்வியின் சவால்களை தாண்ட வைக்கிறது.

06. தோல்வி நிரந்தரமானது என்பதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரில்லை என்பதை மனதளவில் கூறிக்கொள்ளுங்கள்.

07. ஒருவனுக்கு வேண்டிய மிகப்பெரிய தகுதி சகிப்புத்தன்மையாகும். சகிப்பு தன்மை இல்லாவிட்டால் வெற்றியை எட்டித்தொட முடியாது. சகிப்பு தன்மை இல்லாவிட்டால் எதிரிகளை உருவாக்கிவிடுவோம் எச்சரிக்கை.

08. உலக மதங்களை பிரிக்கும் சக்தியாக சகிப்பு தன்மையற்ற குணம் காணப்படுகிறது. ஒருவரை ஒருவர் எதிரியாக்கி அழிவுப்பணிகள் நடக்க சகிப்புத்தன்மையற்ற போக்கே காரணமாகிறது.

09. சகிப்பு தன்மை குறையும் போது நாகரிக வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது. மனித மனத்தில் இருள் மேகம் சூழ்ந்து விடுகிறது. பலர் சகிப்பு தன்மை குன்றி கொலையும் செய்துவிடுகிறார்கள், பின்னரே அழுகிறார்கள்.

10. தற்கொலை செய்யப்போகும் ஒருவன் சகிப்புத்தன்மை குன்றி தூக்கில் தொங்கிய பின் வாழ ஆசைப்படுவான் ஆனால் அவனால் முடிவதில்லை. எனவே சகிப்பு தன்மையே முக்கியமாகும்.

11. மற்றவர்களுடன் போர் செய்வதால் நன்மை வராது.. அவர்களை அனுசரித்து போனாலே நவீன வாழ்க்கையை உருவாக்கலாம்.

12. போர் சரியானது என்ற கருத்தை குழந்தைகள் உள்ளத்தில் படிய வைத்ததால்தான் ஜேர்மனி உலகப்போரை உருவாக்கி உலக அழிவுக்கு துணை போனது. ஒரு காலமும் போருக்கு மக்களை தூண்டுதல் கூடாது.

13. பலவந்தம் மூலம் அமைதி வராது. புரிந்து கொண்டு அனுசரித்து நடப்பதாலேயே அதை அடைய முடியும்.

14. மதங்கள் போரை தவிர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். போர் வெறியை வளர்த்தால் அவை மதங்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.

15. நாடுகளுக்கிடையே அமைதி ஏற்பட வேண்டுமானால் ஒரு சிறிய சிந்தனையாளர் கூட்டம் ஒன்று தனது பணியை முதலில் தொடங்கினால்தான் அதற்கு ஒரு தொடக்கம் ஏற்படும்.

16. தலைவர்கள் தங்கள் செல்வங்களை பெருக்குவதில் அர்த்தம் எதுவும் கிடையாது. பிறக்க இருக்கும் பிள்ளைகளை நினைத்து நடக்க வேண்டியதே முக்கியம்.

17. உலகின் தேவாலயங்கள், பெரும் பெரும் பல்கலைக்கழகங்கள் எல்லாம் மனிதனின் கற்பனை திறனை கோணல்மாணலாக்கி வைத்துள்ளன. இவர்களின் வேலைதான் இன்றைய அமைதியற்ற உலகம் என்பதை புரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

18. இவர்களை ஒதுக்கித் தள்ளி போர் வேண்டாம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து அமைதியை வென்றெடுக்க வேண்டும்.

19. உலக அமைதி என்ற கோவிலைக் கட்டுங்கள். பிறக்கப்போகும் குழந்தைக்கு போர் மிக்க உலகத்தை கொடுத்து உங்கள் பகைகளை அவர்கள் வாழ்க்கை மீது சுமத்தாதீர்கள். இதுவரை நடந்த போர்க்கள் எல்லாம் தேவையற்ற போர்களே.

20. எந்த மதமும் பெரியதல்ல எந்த கடவுளும் பெரியவரல்ல தேவையற்ற வேலைகள் செய்து மக்களிடையே மதப்பிரிவை வளர்த்து இரத்தம் சிந்த வைக்காதீர்கள்.

21. நீங்கள் குழந்தைகளை கவருங்கள் பின் பெற்றோரை கவரலாம்.

22. சுயநல நோக்குடன் நாம் வாழ்தல் கூடாது.

23. நேசப்படைகளில் வௌ;வேறு நாட்டவர் இருந்தாலும் ஓர் இலட்சியத்திற்காக போராடியதால் வெற்றி பெற்றார்கள்.

24. பகையை ஒதுக்கித்தள்ளுங்கள் வெற்றி வரும்.

25. மற்றவரின் புகழை அழிக்க வேண்டாம். எல்லோரையும் புகழுடன் வாழ்ந்து மரணிக்க அனுமதியுங்கள். எவருடைய வாழ்வையும் தயவு செய்து தோற்கடிக்க நினைக்க வேண்டாம்.

அலைகள் பழமொழிகள் வரும் 26.09.2018

Related posts