சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தெரிவு

2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் தலைவர் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

அதன்படி, 2018 ஆம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக கிண்ண கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு தலைவர் மோட்ரிச்சின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

உலகக் கிண்ணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீரருகான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts