உறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு- அதிர்ச்சி காரணம்

ஐரோப்பாவில் ஒரே நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்ற நான்கு பேரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அதில் மூன்று பேர் மருத்துவ உதவி பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, 53 வயது பெண்மணி ஒருவர் பக்கவாதத்தில் உயிரிழந்த போது அவரின் வெவ்வேறு உறுப்புகள் நான்கு தனித்தனி நபர்களுக்கு மாற்றப்பட்டது. உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது செய்ய வேண்டிய அனைத்து சோதனைகளையும் செய்துள்ளனர். அதில் உறுப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவை ஆரோக்யமானவை என்றும் அறிந்த பின்னரே அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து 16 மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து நுரையீரலை தானமாகப் பெற்றவர் நுரையீரல் தொடர்பான சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதுதான் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் செல்களை எடுத்து டி.என்.ஏ. ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது…

பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு – டிவிட்டர் நிறுவனம்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு - டிவிட்டர் நிறுவனம் கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் (messages) மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் பிழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிவிட்டரினுள் நுழைந்தவுடன் அதில் குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையானது 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீடித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப்பிழையினால் மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை வெளியிடாத அந்நிறுவனம், மொத்த பயன்பாட்டாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானோருக்கு மட்டுமே இது பிரச்சனையாக இருப்பதாக கூறியுள்ளது. டான்சானியா: படகு விபத்தில் 136 பேர் பலி டான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பல நூற்றுக்கணக்கானோரை…

இரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி, 20 பேர் காயம்

இரானில் தென் மேற்கு நகரமான அஹ்வஸில் ராணுவ அணிவகுப்பின் போது துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில், பொதுமக்கள் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அணிவகுப்பு நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராணுவ சீருடைகள் அணிந்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு பின்னால் இஸ்லாமிய போராளிகள் இருக்கக்கூடும் என அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன? என்ன சொல்கிறது இரான் அணுசக்தி ஒப்பந்தம்? - 5 முக்கிய அம்சங்கள் இராக்குடன் 1980-88 போர் தொடக்கத்தின் ஆண்டினை குறிக்கும் வகையில், அந்நாடு முழுவதும் ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் நேரப்படி 9:00 மணிக்கு தொடங்கிய இத்தாக்குதலில் குறைந்தது நான்கு துப்பாக்கிதாரிகள் ஈடுபட்தாக ஃபார்ஸ் செய்தி முகமை…

சாமி 2 – சினிமா விமர்சனம்

விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் 2003ல் வெளிவந்து வெற்றிபெற்ற சாமி படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளி வந்திருக்கிறது. முதல் படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால், அந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில், திருநெல்வேலியில் பெரும்புள்ளியாக இருக்கும் பெருமாள் பிச்சையை சுட்டுக்கொன்றுவிடுவார் திருநெல்வேலியின் உதவி ஆணையரான ஆறுச்சாமி (விக்ரம்). அதிலிருந்து இந்தப் படத்தின் கதை துவங்குகிறது. பெருமாள் பிச்சையைச் (கோட்டா சீனிவாசராவ்) சுட்டுக்கொன்றுவிட்டு நகரை அமைதிக்கு திருப்பியிருக்கும் நேரத்தில் ஆறுச்சாமியின் மனைவி கர்ப்பமாகிறார். செத்துப்போன பெருமாள் பிச்சைக்கு கொழும்பு நகரில் மனைவி (சுதா சந்திரன்) ஒருவர் இருக்கிறார். அவருக்கு மூன்று மகன்கள். பெருமாள் பிச்சை காணாமல் போனதை அறிந்து அவரைத் தேடிப்பார்க்க திருநெல்வேலிக்கு வருகிறார்கள் மூவரும். ஆறுச்சாமிதான் அவரைக் கொன்றார் என்பது தெரிந்ததும் அவரையும் அவரது மனைவியையும்…

கோட்டை கல்லாறில் உள்ள இரண்டு தங்க கடற்கன்னி சிலைகள் !

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புது உருவம் பெற்ற டென்மார்க் H.C.Anderesan இன் கற்பனைக்கு கோட்டை கல்லாறு தந்த புதிய வடிவம் !