`கிர்ன்ச்’ முதல் `ஆங்க்ரி பேர்ட்ஸ்’ வரை… எதிர்பார்ப்பில் இருக்கும் அனிமேஷன் படங்கள்!

எதிர்பார்ப்பில் இருக்கும் அனிமேஷன் படங்கள். அனிமேஷன் திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ஒரு துறை. சிறிய வயதில் நாம் கார்டூனாக, புத்தகமாக ரசித்தவற்றைத் திரைக்கதை வடிவில் பார்ப்பதென்பதே ஒரு பேரின்பம். உதாரணமாக தற்போது ஏதேனும் ஒரு அனிமேஷன் திரைப்படம் வெளியானால், திரையரங்குகளில் குட்டிக் குழந்தைகளைவிட மீசையும், தாடியும் வைத்த 90ஸ் கிட்ஸ்களைத்தான் அதிகமாகக் காண முடியும். இத்துறை, வருடத்துக்குப் பல மில்லியன் சம்பாதிக்கும் வல்லமைகொண்டது. அதனாலே மற்ற முக்கியமான படங்களோடு சேர்த்து, சில அனிமேஷன் படங்களும் வெளிவரும். 2018-ம் ஆண்டு அனிமேஷன் துறைக்கு, நல்ல வருமானம் தந்த படம், `Incredibles-2', கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் வசூலித்தது. தொடர்ந்து, பல படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க படங்களைப் பற்றிப் பார்ப்போம். ஹாலிவுட் உலகில் பச்சை நிற மனிதன் என்றால்,…

மீண்டும் ப்ரிடேட்டர்… அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது? #ThePredator

முன்னர் அர்னால்டு அசத்திய, ஆனால் தற்போது அதள பாதாளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் ப்ரிடேட்டர் சீரிஸை இயக்குநர் ஷேன் ப்ளாக் மீட்டுள்ளாரா? #ThePredator படம் எப்படி? ஆக்ஷன் ஹீரோ அர்னால்டு ஸ்வார்சுநேகர் நடிப்பில் ப்ரிடேட்டர் படத்தொடரின் முதல் பாகம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. அர்னால்டின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளிவந்த ப்ரிடேட்டர் படங்கள் அந்த அளவு வரவேற்பையும், பாராட்டையும் பெற முடியாமல் தவித்தன. கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பாகமும் தோல்வியையே தழுவியது. இப்போது அதன் நான்காம் பாகமான #ThePredator படத்தை இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக். இவர் அர்னால்டு நடித்த ப்ரிடேட்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதோடு அல்லாமல் `கிஸ் கிஸ் பேங் பேங்’, `தி நைஸ் கைஸ்’ மற்றும் `அயர்ன் மேன் 3’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.…

கண்டதும் காதலில் விழுந்து கண்டவர்களிடம் வாங்கிக் கட்டிய த்ரிஷா

சென்னை: கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா. த்ரிஷா துபாயில் உள்ள ரிசார்ட்டில் டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு அவர் சில புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். த்ரிஷா த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். பீட்டா விளம்பர தூதுவராக இருந்து கொண்டு டால்பினை கொடுமைப்படுத்தியுள்ளார் த்ரிஷா என்று அவர்கள் கொந்தளித்துள்ளனர். டால்பின் புகைப்படங்களை போட்டால் ரசிகர்கள் க்யூட், அழகு என்பார்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி பிரச்சனையாகிவிட்டதே? விளையாட்டு டால்பின்களை நீச்சல் குளத்தில் அடைத்து வைத்து மனிதர்களுடன் விளையாடச் செய்வது அவைகளை டார்ச்சர் செய்வதாகும். பணக்காரர்களின் விளையாட்டுக்கு டால்பின்கள் தான் கிடைத்ததா?. த்ரிஷா, நீங்கள் எல்லாம் பீட்டா தூதுவர் என்று வெளியே சொல்லாதீர்கள்.…