24 மணி நேர நிலவரம் என்ன? மெர்சல் சாதனையை முறியடித்ததா 2.0 டீசர்?

சென்னை: 2.0 டீசர் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

நொடிக்கு நொடி சரவெடி என்பதுபோல ஆரம்பமே அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது டீசர்.

அக்‌ஷய்குமாரின் மிரட்டும் வில்லத்தனம், சிட்டி ரோபோவின் ஆக்‌ஷன் காட்சிகள், கிராபிக்ஸ் என பலவிஷயங்கள் பாரட்டுகளைப் பெற்றன.

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்பட டீசரின் சாதனையை 2.0 டீசர் முறியடிப்பது கடினம் என விஜய் ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர்.

அதை மெய்ப்பிக்கும் வகையில், டீசர் வெளியாகி ஒரு மணிநேரத்திற்கு பிறகு, மெர்சல் டீசரின் சாதனையை முறியடிக்காமலேயே இருந்ததாக சொல்லப்பட்டது.

கடந்த ஆண்டு மெர்சல் டீசர் வெளியான போது ஒரு மணி நேரத்தில் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றது எனவும், ஆனால் 2.0 டீசர் ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சம் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது எனவும் கூறும் ட்வீட்களை பார்க்க முடிந்தது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற டீசர் என்றால் அது காலா பட டீசர் தான்.

வெளியான 24 மணி நேரத்திற்க்குள் 12 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக 10 மில்லியன் பார்வையாளர்களோடு மெர்சல் டீசர் முன்னணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதனால், 24 மணி நேர நிலவரப்படி 2.0 பட டீசர் மெர்சல் டீசரின் சாதனையை முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், டீசர் வெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து 24.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 2.0 டீசர் சாதனை படைத்துள்ளது.

அதை லைகா புரடக்‌ஷன்ஸ் உறுதிபடுத்தியுள்ளது. தமிழில் மட்டுமே வெளியான மெர்சல் திரைப்பட டீசர் இதுவரை 3.9 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

2.0 டீசரைப் பொருத்தவரை மூன்று மொழிகளிலும் சேர்த்து கணக்கிட்டால், அதிகபட்சம் இரண்டு நாட்களில் மெர்சல் டீசரின் சாதனையை முறியடித்துவிட முடியும் எனத் தெரிகிறது.

ஆனால் தமிழ் என்று வரும்போது இன்னும் முழுமையாக மூன்று கோடி பார்வையாளர்கள் தேவை.

ரஜினிகாந்த் ரசிகர்கள் முழுவீச்சில் செயல்பட்டால் மூன்று அல்லது நான்கு தினங்களில் நல்ல முடிவை எட்ட முடியும்.

Related posts