24 மணி நேர நிலவரம் என்ன? மெர்சல் சாதனையை முறியடித்ததா 2.0 டீசர்?

சென்னை: 2.0 டீசர் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. நொடிக்கு நொடி சரவெடி என்பதுபோல ஆரம்பமே அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது டீசர். அக்‌ஷய்குமாரின் மிரட்டும் வில்லத்தனம், சிட்டி ரோபோவின் ஆக்‌ஷன் காட்சிகள், கிராபிக்ஸ் என பலவிஷயங்கள் பாரட்டுகளைப் பெற்றன. கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்பட டீசரின் சாதனையை 2.0 டீசர் முறியடிப்பது கடினம் என விஜய் ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில், டீசர் வெளியாகி ஒரு மணிநேரத்திற்கு பிறகு, மெர்சல் டீசரின் சாதனையை முறியடிக்காமலேயே இருந்ததாக சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு மெர்சல் டீசர் வெளியான போது ஒரு மணி நேரத்தில் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட…