‘தி நன்’ படத்தில் கலைஞர்களின் நடிப்பில் நம்பகத்தன்மையும் கூடி வந்திருக்கிறது

உலகம் முழுவதிலும் இவ்வாரம் வெளியாக உள்ள ‘தி நன்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெரும் என்று படத்தைக் குறித்து நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

‘தி நன்’ படத்தில் நடிப்பவர்கள் பற்றி ஹாலிவுட் இளம் இயக்குநர் கோரின் ஹார்டி தெரிவிக்கையில், ”டாய்ஸா ஃபார்மிகா மற்றும் டெமியான் பிர்சீர் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் ‘தி நன்’ படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெறும்.

தனிப்பட்ட முறையிலும் சரி, யூனிட் அளவிலும் சரி, டாய்சா ஃபார்மிகா மற்றும் டெமியான் பிர்சிர் ஆகிய இருவரின் நடிப்புத் திறமை வெளிப்பட்டுள்ளவிதம் அற்புதமாக அமைந்துவிட்டது. அவர்களின் நடிப்பு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கூடி வந்திருக்கிறது. இப்படத்தில், திரைக்கதையின்படி சகோதரி ஐரீனாக, டாய்சா ஒரு ஓவியமாக தீட்டப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடித்துள்ளthu பற்றி டாய்ஸா ஃபார்மிகா மற்றும் டெமியான் பிச்சிர் ஆகிய இருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

டாய்ஸா பார்மிகா தெரிவிக்கையில், ”முதன்முதலில் திரைக்கதையைப் படிக்கும்படி என் கையில் கொடுத்தார்கள். அதைப் படிக்கும்போதே எனக்குள் நான் சிலிர்த்துப்போனேன். திகிலும், வேட்டையுமாகப் பாய்ந்து செல்கிறது திரைக்கதை. இக்கதை எழுதிய அவர் என்னவிதமான படைப்பாளி என்று நான் வியந்தேன். படத்தின் வரும் காட்சிகளில் ரசிகர்களை திளைக்க வைத்துவிடுவார்.

படத்தில் நடிக்கும்போது ரசிகர்களை ஒன்றிப்போகும்படி அவர்களைக் கட்டிப்போடும் வித்தை இப்படத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன். ரோலர் கோஸ்டரில் எப்படி த்ரில்லிங் தருணங்களை மேலும் கீழேம் போகும்போது நாம் மாறி மாறிக் கடக்கிறோமே அதைப்போன்ற ஒரு அனுபவத்தை நிச்சயம் இப்படம் தரும்” என்று உறுதி தருகிறார்.

டெமியான் பிச்சிர் கூறுகையில், ”ஃபாதர் புர்க்கே போன்ற ஒரு பிரமாண்ட பாத்திரப்படைப்பை இதுவரை நான் படித்ததில்லை. இப்படத்தில் அப்பாத்திரத்தை கண் கவரும் வகையில் வடித்திருக்கிறார்கள்.

உண்மையில் இக்கதாபாத்திரத்தை நான் மிகவும் நேசித்தேன். இப்படம் சிக்கலான திரைக்கதையைக் கொண்டது. ஆனால், சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு வழிகளில் இக்கதை மிகவும் ஆழமானது” என்று வியக்கிறார்.

பிரஞ்சத்தின் மற்றொரு இருண்ட பகுதியை ஆராயும் திரைப்படமே ‘தி நன்’. ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. செப்டம்பர் ஏழு அன்றே வெளியாகும் இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.

தன் முதல் படமான ‘தி ஹாலோ’ (2015, ஒரிஜினல் டைட்டில் தி வுட்) படத்தின் திகிலிலிருந்து இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில் மூன்று வருடத்தில் அடுத்த திகில் படத்தோடு களம் இறங்கியுள்ளார இயக்குநர் கோரின் ஹார்டி.

Related posts