‘Mission Impossible: Fallout’ – விமர்சனம்

கடந்த பாகத்தில் நாயகன் ஈதன் ஹன்ட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சாலமன் லேன் என்பவரின் ’சிண்டிகேட்’ என்னும் இயக்கம் தற்போது ‘apostles’ என்ற பெயரில் தீவிரவாத இயக்கமாக மாறிச் செயல்பட்டு வருகிறது லண்டனில் இருக்கும் ஈதன் ஹன்ட்டுக்கு ஒருநாள் ரகசியல்த் தகவல் ஒன்று கிடைக்கிறது. அதில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 3 புளூட்டோனிய உலோகங்களைப் பற்றியும், அதை வாங்குபவர்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களின் படி தனது சகாக்களான பென்ஜி, லூதர் ஆகியோருடன் பெர்லின் செல்லும் ஹன்ட், அங்கு நடக்கும் சண்டையில் புளூட்டோனியம் உலோகங்களை apostles தீவிரவாதிகளிடம் கோட்டை விட்டு விடுகிறார். பின்னர் apostles இயக்கத்தோடு தொடர்புடைய அணு ஆயுதங்கள் நிபுணர் ஒருவரை பிடித்து அவரிடம் apostles இயக்கத்தின் அடுத்தகட்ட திட்டத்தை அறிகிறார் ஈதன் ஹன்ட். apostles தீவிரவாதிகளிடமிருந்து 3…

‘தி நன்’ படத்தில் கலைஞர்களின் நடிப்பில் நம்பகத்தன்மையும் கூடி வந்திருக்கிறது

உலகம் முழுவதிலும் இவ்வாரம் வெளியாக உள்ள 'தி நன்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெரும் என்று படத்தைக் குறித்து நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 'தி நன்' படத்தில் நடிப்பவர்கள் பற்றி ஹாலிவுட் இளம் இயக்குநர் கோரின் ஹார்டி தெரிவிக்கையில், ''டாய்ஸா ஃபார்மிகா மற்றும் டெமியான் பிர்சீர் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் 'தி நன்' படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெறும். தனிப்பட்ட முறையிலும் சரி, யூனிட் அளவிலும் சரி, டாய்சா ஃபார்மிகா மற்றும் டெமியான் பிர்சிர் ஆகிய இருவரின் நடிப்புத் திறமை வெளிப்பட்டுள்ளவிதம் அற்புதமாக அமைந்துவிட்டது. அவர்களின் நடிப்பு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கூடி வந்திருக்கிறது. இப்படத்தில், திரைக்கதையின்படி சகோதரி ஐரீனாக, டாய்சா ஒரு ஓவியமாக தீட்டப்பட்டுள்ளார்'' என்று…

ட்ரம்ப்பை ஆச்சரியப்படுத்திய வடகொரியா

வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் இடம்பெறாமல் இருந்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். வடகொரியா தனது நாட்டின் 70-வது ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. இதில் அந்நாட்டின் ராணுவ சக்தியைக் காட்டும் சக்தி வாய்ந்த வாகனங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இதற்கு முன்னர் வடகொரியா நடத்திய சக்தி வாய்ந்த ராணுவ அணிவகுப்பில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின் அணு ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த அணிவகுப்புல் அணு ஆயுதங்கள் இல்லாமல் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நகர்வுதான் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வடகொரியாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் ஏதும் இடம்…