அலைகள் வாராந்தப் பழமொழிகள் 07.09.2018 வெள்ளி

01. வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நம்மை வெற்றி வாழ்விற்கு அழைத்து செல்லும் அலைகள் வரும். அது அதிர்ஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அதை உதாசீனம் செய்தால் அது நம்மை பள்ளங்களில் விழுத்திவிடும். இதுவே வாய்ப்பு வெற்றிகரமாக நீந்தி செல்லுங்கள்.

02. அலைகள் வருகின்றபோது அவற்றை பயன்படுத்தினால் உதவி பெறலாம். தவறினால் நம் முயற்சி தோற்றுவிடும்.

03. பயம் மற்றும் தோல்விக்கு நாம் இடம் கொடுத்தால் அவை நம்மை பள்ளத்திலும் துன்பத்திலும் தள்ளிவிடும்.

04. தோல்வியடையாதவன் உழைத்திருக்கமாட்டான் எதற்கும் ஆசைப்பட்டிருக்கவும் மாட்டான்.

05. சில சமயங்களில் நாணயமான ஒரு தோல்வியும் புகழ் பெற்ற வெற்றியாக ஏற்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

06. உலக வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகள்தான் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

07. தோல்வியால் துவண்ட மனிதர்களே எழுந்து நில்லுங்கள் மறுபடியும் செயற்படுங்கள்.. ! உலகம் என்ற உழைப்பு அறையில் உங்களுக்கு இடமிருக்கிறது.

08. தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தமைக்காக நன்றி கூறுங்கள் அதிலிருந்து நீங்கள் மீண்டு விட்டால் மறுபடியும் முயற்சி செய்யலாம்.

09. உங்களைத் தவிர வேறு யாருக்கும் உங்களை தோல்வியாளர் என்று முத்திரை குத்த உரிமையில்லை.

10. சக்கரம் ஒன்று சுழல்கிறது. அது எல்லா நேரங்களிலும் இன்பத்திலேயே நின்றுவிடுவதில்லை.

11. தோல்வி வந்தால் கவலை வேண்டாம் இன்பம் வரும் காத்திருங்கள் மனம் துவண்டு விடாதீர்கள்.

12. இரவுக்கு பின் ஒளி வருவது போல நிலமை மாறும். நம்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்து உண்மையாக முயற்சிக்க வேண்டும்.

13. சில காலங்களில் ஆபிரகாம் இலிங்கன் இதையே கூறுவாராம். சிரமமான கால கட்டங்களில் அவர் மனம் கலங்கமாட்டார். அதுபோல மனம் கலங்காமல் உறுதியாக செல்லுங்கள்.

14. பெரும்பாலான மக்கள் தோல்வியை தழுவுகிறார்கள் அதற்கு என்ன காரணம் தெரியுமா..? தோற்றுப்போன பழைய திட்டத்திற்கு பதிலாக ஒரு புதிய திட்டத்தை உருவாக்க அவர்கள் உறுதி மேற்கொள்ளாது தாமதித்து வருகிறார்கள்.

15. சூரியன் உதிக்கும்போது ஒவ்வொரு ஆன்மாவும் புதிதாய் பிறக்கிறது. சந்தோஷ தருணங்களில் குழந்தை போல சிரியுங்கள். மகிழ்ச்சி மறைந்துவிடும்போது செவிட்டு ஊமையாக மாறிவிடுங்கள்.

16. அவமானங்களும் காயங்களும் பலமாக ஏற்பட்டுவிடலாம். அவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அழுதால் விலகிவிடாது என்னால் முடியுமென்று முன்னேறுங்கள்.

17. கடந்த காலத்தின் அழுக்கு ஆவணங்களை ஒதுக்கி தள்ளுங்கள். எதிர்காலத்திற்காக பனிவெள்ளை போன்ற புதிய பக்கத்தை தயார் செய்யுங்கள்.

18. நரகத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு இரவும் ஒரு நட்சத்திரம் உங்களை வழி நடத்தும். ஒரு புதிய சொர்க்கத்தை நோக்கி.

19. தோல்வி என்பது ஒருவர் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாறுகிறார் என்பதற்கான திருப்பமே.

20. தோல்வி கற்றுக்கொடுத்த பாடங்களில் மிகவும் பெரியது அடக்கமாகும்.

21. அடக்க குணம் இல்லாவிட்டால் ஒருவர் பெரிய மனிதராக மாற முடியாது.

22. ஆபிரகாம் இலிங்கனின் தோல்விகளே இன்றைய அமெரிக்காவின் வெற்றி.

23. உங்களுடைய வெற்றி விதை வளர வருபவையே தோல்விகள் என்று புத்தெழுச்சி பெறுங்கள்.

24. எவ்வளவு உயரம் பறந்தார் என்பது அளவீடல்ல.. எப்படி பாதாளத்தில் இருந்து மீண்டு எழுந்தார் என்பதே அளவீடாகும்.

25. உங்கள் சோதனைக்காலம் முடிந்து வெற்றியில் காலடி வைக்கிறீர்கள் இன்று முதல் என்று புரிந்து கொள்ளுங்கள். இதையே தெய்வீக அறிவு விளக்குகிறது என்பதையும் புரியுங்கள்.

அலைகள் வெற்றி பழமொழிகள் வரும். 07.09.2018

Related posts

Leave a Comment