சல்மான் கானில் ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண்

சல்மான் கானின் வயது 54. இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீடான கேலக்ஸி அபார்ட்மென்ட் கட்டிடம் அருகில் குசும் என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். திடீரென அவர் அந்த கட்டிடத்தில் கேட் வழியாக உள்ளே செல்ல முயன்றார்.அப்போது அங்கு நின்றிருந்த காவலாளிகள் குசுமை பிடித்து கொண்டனர். காவலாளிகளுடன் குசும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விசாரணையில் தான் சிறு வயது முதலே சல்மான் கானின் தீவிர ரசிகை என்றும், அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவும் சல்மான் கானை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்து அவரை திருமணம் செய்வதற்காகவே தான் மும்பைக்கு வந்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இப்பெண் குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். மேலும்…

தன்பாலின உறவு சட்டவிரோதம் அல்ல

தன்பாலின உறவு சட்டவிரோதம் அல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நடிகை த்ரிஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை ரத்து செய்து 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தன்பாலின உறவு ஆதரவாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. முக்கியத்துவும் வாய்ந்த இந்த வழக்கு பின்னர் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, விரிவான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன…

‘உயிரே உயிரே’ பாடல் குறித்து உருகிய வைரமுத்து

பம்பாய் படத்தில் வரும் ‘உயிரே உயிரே’ பாடல் குறித்து உருகிப் பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து. மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. அந்த விழாவில் மேடையேறிய வைரமுத்து, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரிடமும், ‘உங்கள் கூட்டணியில் உருவான பாடல்களில், எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்டார் பின்னணிப் பாடகர் கார்த்திக். முதலாவதாகப் பேசிய வைரமுத்து, “எனக்கு ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’. கலைக்கு கொடுக்கிற மிக முக்கியமான மூலதனம் நேரம். மாலை 6.30 மணிக்கு 30 நிமிடத்துக்குள் கோடம்பாக்கத்தை அடைய வேண்டும். ஆனால், அது சாத்தியப்படாது. அப்படி வேகமாகப் புறப்படுகிற நேரத்தில் கூட ‘உயிரே’ பாடல் வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ கேட்டால், இப்போதுகூட நின்றுவிடுவேன். என்னுடைய பாடல்களில் மிக அழகாகப் படமாக்கப்பட்ட பாடல் என்றால், நான்…

இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்து வரும் நிலை

அடுத்த 3 ஆண்டுகளுக்கு 10 பில்லியன் டாலர்கள் கூடுதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு டோனல்ட் ட்ரம்ப் தலைமை அமெரிக்க அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருவதால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் உள்ளன. இது தொடர்பாக இன்று இருதரப்பு விவாதம் டெல்லியில் நடைபெறுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள பொருளாதார தேசியவாதிகள் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக இத்தகைய நெருக்கடிகளை அளிக்கின்றனர். ஏற்கெனவே இறக்குமதியினால் அதிக டாலர்கள் தேவையினால் ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக வரலாறு காணாத அளவுக்கு சரிவு கண்டு வருகிறது, இதில் கூடுதல் 10 பில்லியன் டாலர்கள் கொள்முதலுக்கு உத்தரவாதம் வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கடி கொடுப்பதால் இந்திய அரசு கடும் சிக்கலில் உள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் உபரி உள்ளது. இந்த உபரியின் பயனை…

ஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தின்போது, 1861இல் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உடலுறவு கொள்ளும் ஒருபாலுறவு குற்றமாக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து முக்கியத் தகவல்களின் தொகுப்பு இதோ. சமூகத்தில் மாற்றம் உண்டாகும்போது, சட்டங்களிலும் மாற்றம் உண்டாக வேண்டும். 158 ஆண்டுகால பழமையான சட்டம் என்பதால் அது தொடர்ந்து நீடிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒரு ஆண் இன்னொரு ஆணையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் தன் துணையாக தேர்வு செய்வது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. எதிர் பாலினத்தவரை தன் துணையாகத் தேர்வு செய்பவர்களுக்கும் ஒரே பாலினத்தவரைத் தேர்வு செய்பவர்களுக்கும் இடையே எவ்விதமான பாகுபாடும் காட்டக்கூடாது. சமூகத்தின் பார்வையில் ஒருபாலுறவு…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்திடுக

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலடைக்கப்படடுள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக அரசைப் பொறுத்தவரை இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அதனை மத்திய அரசு…

ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்..

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்…

செய்திகளும் நிஜங்களும் இன்றைய தமிழக பத்திரிகைகளில்

Win TV 06-09-2018 News and Views #குட்கா ஊழல்-சி.பி.ஐ. 40 இடங்களில் சோதனை.அமைச்சர்,டி.ஜீ.பி.?? #அதிமுக மீது பா.ஜ.க நடவடிக்கை- திமுக வை திருப்திப்படுத்தவா ? #அழகிரி பேரணி செய்தி விளம்பரமாகாமல், சி.பி.ஐ. சோதனை வருதா? #திமுக திருப்திபடுத்த அழகிரி விளமபரம் மறைக்க நாள் குறித்தார்களோ. #பால் அமைச்சர் எச்சரிக்கைக்கு பதில் சோதனை என நமது எம்.ஜீ.ஆர்.ஏடு? #எப்படியோ,உண்மை சோதனையை நாள் பார்த்து அரசியலாக்கிய சி.பி.ஐ.? #அழகிரி பேரணி கூடியது பல்லாயிரம். அவரவர் அங்கங்கே நிற்க.. #30000 பேர் அழகிரிக்கு வந்ததே திமுகவிற்கு அதிர்ச்சி.. #தினகரனுக்கு அடிமட்ட வேலை நடக்குது, மாவட்டங்களில் திரளுது #மாணவி சோபியா மீது மீண்டும் ஒடுக்கல்..ஏன் இந்தக் கொலைவெறி?.. #ஹைடிரோகார்பன் வருது --வேதாந்தாவுக்கு இரண்டு?/-ஸ்டாலின் #சிவசேனா- "பொருளாதார நெருக்கடிக்கு" காங்கிரசை காரணமாக்குவதா? #மோடி மீது சிவசேனா பாய்ச்சல்,ஆர்.எஸ்.ஏஸ்.காங்கிரஸ் ஆதரவா ? #தருன் விஜய்…

ஆசிரியர் தினம்-சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்

in TV 05-09-2018 News and Views #ஆசிரியர் தினம்-சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்-சித்ரகுப்தன்?? #சமூக நீதி சாத்தியமாகுமா எனும் காலம்-சர்வபள்ளி பிறந்த நாள் #சமூக நீதி சாத்தியம்,ஆகிவிட்டது எனும் காலத்திலாவது சாவித்ரி பூலே... #சாவித்ரி பூலே பங்களிப்பை அங்கீகரித்து, பிறந்தநாளை கொண்டாடு. #வ.உ.சி. பிறந்த நாள். வெள்ளைக்காரனை எதிர்த்து கப்பல் விட்ட தேசியம் #வ.உ.சி.கு உதவிய முஸ்லீம் பணக்காரர்?? -வெளிநாட்டார் கொடுத்த பணம்?? #கரமச்சந்த் காந்தி கொடுக்காத பணம்-- #பிர்லாவின் எழுதப்படாத,கையெழுத்திட்ட காசோலையை வாங்கிய காந்தி- #அழகிரி பேரணி-அம்பதாயிரம் பேர் வருவார்களா? ஆதரவாளர் இடைநீக்கம் #ஆற்காட்டார் பேட்டியில், ஸ்டாலினின் இயலாமை--திமுக சமாளிப்பு #ராஜேந்திர பாலாஜி-மோடியிடம் கேட்ட பத்து அமைச்சர் பதவிகள் , #இல.கணேசன் பதிலில், திமுக, அதிமுக இருவரிடம் பேசும் பாஜக கலை #பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமா?…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கி.செ.துரையின் நூல்

கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்னும் சர்வதே அரசியல் விவகார இராஜதந்திர நூலும், புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூலும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில் இந்த நூல்கள் வாசிக்கப்பட ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரும்பெரும் பணியை தமிழர் நடுவம் தமிழகத்தில் இருந்து முன்னெடுக்கிறது. இது குறித்து தமிழர் நடுவத்தின் கமலேஷ் பாண்டியர் அனுப்பிய செய்தி.. இன்று திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் கி.செ துரை அவர்கள் எழுதிய கிலாரிகிளண்டன் தோற்றரா தோற்கடிக்கப்பட்டாரா ? என்ற தமிழின் முதல் சர்வதேச ராசதந்திர அரசியல் நூல் ,தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் வெளியீடு கல்லூரி நூலகத்திற்கு ஆங்கில துறை மாணவிகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... போரின் இழப்புகளை தாண்டி தமிழினம் வர…