முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்

நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் என நடிகை நமீதா கூறி உள்ளார். திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழ் மொழியைக் கற்ற அனுபவங்களை கலகலப்பாக நடிகை நமீதா பகிர்ந்து கொண்டார். சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். திரைப்படங்களில் நடிக்க…

படவிழாவில் பாக்யராஜ் ருசிகர பேச்சு

வெங்கி இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகரும், டைரக்டருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:– ‘‘நடிகர்களை கூத்தாடிகள் என்று சொல்வது உண்டு. அதையே இந்த படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். நகைச்சுவை உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் காட்சிகள் எனக்கு அவ்வப்போது தோன்றும். மவுன கீதம் படத்தில் சரிதா குளித்து விட்டு வந்து பின்னால் ஊக்கு மாட்டிவிட சொல்லும் காட்சி தனக்கு பிடித்து இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சொன்னார். ஒரு படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் நகைச்சுவை வைத்தால் நன்றாக இருக்கும் என்றனர். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு மாமி மீது விழுந்து அவரிடம் சாரி மாமி என்பது போன்றும் மாமியோ செம ஹாட் மச்சி என்று பதில் சொல்வது போன்றும் காட்சி எடுத்தோம் இப்போதுகூட செம ஹாட்…

இயக்கப் போகும் படத்தில் மும்முரம் காட்டும் தனுஷ்

இரண்டாவதாக இயக்கப் போகும் படத்துக்கான வேலைகளில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளார் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகளுக்குச் சொந்தக்காரரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். இயக்குநராகவும் தனுஷுக்கு வெற்றியைக் கொடுத்தது இந்தப் படம். ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்தார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. ‘பவர் பாண்டி’யைத் தொடர்ந்து வரலாற்றுப் படமொன்றைத் தனுஷ் இயக்கப் போவதாகவும், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அதைத் தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தற்போது பைனான்ஸ் பிரச்சினையில் இருப்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.…

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ரொமான்டிக் காமெடிப் படமான இது, கடந்த வருடம் ரிலீஸானது. பெரும்பாலானவர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. குறிப்பாக, சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ‘எங்க வீட்டு குத்துவிளக்கு’ மற்றும் ‘தங்கச்சி’ பாடல்கள் இன்றுவரை எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குகிறார் ரத்னகுமார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு ‘ஆடை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமலா பால் பிரதான வேடத்தில் நடிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் இசையமைக்கிறார். வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்…

எழுத்தாளர்களின் கற்பனையை தடை செய்ய முடியாது

சர்ச்சைகளை ஏற்படுத்திய மலையாள நாவலான 'மீஷா'வைத் தடை செய்ய மறுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்தாளர்களின் கற்பனைக்குத் தடை விதிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் எஸ். ஹரீஷ் என்பவர் எழுதிய 'மீஷா' நாவலின் அத்தியாயங்கள் வெளியாகின. அவை இந்து அர்ச்சகர்கள் மற்றும் பெண்கள் குறித்துத் தவறாக சித்தரிப்பதாகக் கூறிப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் 'மீஷா' நாவலின் சில பகுதிகளைத் தடை செய்ய வேண்டும் என்று டெல்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில், ''புத்தகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல், பெண்களைப் பாலியல் பொருட்களாகச் சித்தரிக்கிறது. இது குழு வன்முறையைத் தூண்டிவிடக் கூடும். எனவே அவை தடை செய்யப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவற்றுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்…

மு.க.அழகிரியின் நோக்கங்கள் எதுவும் இல்லாத பேரணி..

தனக்கு ஆதரவாக நடந்த அமைதி பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் வந்ததாக, மு.க.அழகிரி தெரிவித்தார். மு.க.அழகிரி ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை அவரது தலைமையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. முன்னதாக, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து பேரணிக்காக அழகிரி ஆதரவாளர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். பாதுகாப்புக்காக பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆதரவாளர்கள் அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியின் உருவம் பொறித்த கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர். காலை 11.20 மணியளவில் அழகிரி, தன் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்தார். அவருடைய ஆதரவாளர் இசக்கிமுத்து, மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மன்னன் உள்ளிட்டோருடன் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாகனத்தில் பேரணியின் முன்னே வர தொண்டர்கள் பின்னால் வந்தனர். பேரணி திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில்…

கொழும்பில் ஆர்பாட்ட ஊர்வலமும் அமைதிக் குலைவுகளும்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. ------------------- கொழும்பில் இன்று பொது எதிரணியினர் மேற்கொள்ளவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி முழங்காலின் கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அமைச்சரவையின் கூட்டத்தின் போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணி கட்டுக்கடங்காததாக மாறினால் பொதுமக்களின் சொத்திற்கும் உயிர்களிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் பொலிஸா இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி முழங்காலின் கீழ்…

வழக்குகளிலிருந்து விடுபடுவதற்கான பலிபூஜை

தனது குற்றங்களிலிருந்து விடுபடுவதற்காக நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அப்பாவி மக்களை வீதியிலிறக்கி இன்று பலி பூஜை கொடுக்கிறாரென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். இன்று நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் மக்கள் ஆர்ப்பாட்டம் அல்ல இது வெறுமனே திருட்டுக் கேடிகளின் ஆர்ப்பாட்டம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். "கொழும்புக்கு அழைத்துவரும் அப்பாவி மக்களின் ஒருவரையேனும் எம்மைக் கொண்டு பலி கொடுக்க வேண்டும் என்பதே நாமல் எம்.பியின் திட்டமாகவுள்ளது. பலியை எமது பக்கம் திருப்பப் பார்த்தால் நாமல் பபாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்பதனை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்," என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். நாமல் ராஜபக்ஷ எம்.பியைப் போன்று நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்ப முடியாதவர்களே அவருக்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக…

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது

ஆறு மாதமாக யாழ் பொலிசாரால் தேடப்பட்டுவந்த சட்டவிரோத வாள்வெட்டு கொள்ளைக்கும்பலான ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய இந்த நபரை, பொலிஸார் கடந்த ஆறு மாதகாலமாக தேடிவந்ததால் இவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார். இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன், யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது கொக்குவிலில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று வருகை தந்தபோது மானிப்பாய் பொலிஸாரால் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நபர் வருவதை இரகசிய தகலொன்றின் மூலம் அறிந்துகொண்ட மனிப்பாய் பொலிஸார் விரைவாக செயற்பட்டு…

செய்திகளும் நிஜங்களும் தமிழகத்தில் இருந்து பத்திரிகை செய்திகள்..

Win TV 04-09-2018 Views and Views #பெட்ரோல் விலை உயர்வு.ரூ.82 -24 , டீசல் ரூ 75 -19 #வரலாறு காணா உச்சம் -.அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் #பாதுகாப்பு இன்றி வங்கி கடன் கொடுத்ததற்கு,உயர்நீதிமன்றம் கண்டனம் #மோடி, காங்கிரஸ் ஆட்ச்சியைக் குறை கூற, சிதம்பரம், மோடியைக் கேட்க #நிலகண்ணிவெடி வெச்சது காங்கிரஸ்-மோடி..நீங்க என்ன செஞ்சீங்க-ப.சி. #உங்கள் பாஜக ஆட்சியில் "புதுப்பித்துக் கொடுத்த வராகி கடன்" எவ்வளவு? #சில ஆயிரம் கல்விக் கடன் கேட்கும் மக்களுக்கு கடன் கொடுக்க மாட்டீங்க #மக்கள் பணத்தை பெரும் பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுத்த வங்கிகள் #ஐந்து மனித உரிமையாளர்களைக் கைது செய்த புனா காவல்துறைக்கு ?? #நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, எப்படி ஊடகக் கூட்டம்?? #முக்கிய ஆதாரம்னு சொல்லும் கடிதத்த்தை எப்படி ஊடகத்திற்கு கொடுத்தே? நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. #மோடியைக் கொள்ள…