ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரூ.1 கோடி இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும், அவரிடம் மனுதாரர் வக்கீல் குறுக்குவிசாரணை செய்யவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தன்னுடைய கூடுதல் ஆதார ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஷங்கர் தாக்கல் செய்த மனுவையும் ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வக்கீல், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான…

அதர்வாவுக்கு உண்மையான முதல் வெற்றி

அதர்வாவுக்கு உண்மையான முதல் வெற்றி என ‘இமைக்கா நொடிகள்’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இமைக்கா நொடிகள்’. பிரதான பாத்திரத்தில் நயன்தாரா நடித்த இந்தப் படத்தில், அவருடைய கணவராக சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் சுசீந்திரன், “தன் முதல் படமான ‘டிமான்டி காலனி’ திரைப்படத்தில் சின்ன கதைக்களத்தைக் கொண்டு பிரமாதமான திரைக்கதை மூலம் நம் எல்லாரையும் பிரமாதப்படுத்தியவர் அஜய் ஞானமுத்து. இத்திரைப்படத்திலும் வலுவான திரைக்கதை மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். காதல் காட்சிகள் மட்டும் அதிகப்படியான நீளம். அனுராக், நயன்தாரா, நயன்தாராவின் மகள் என படத்தில்…

சிவகார்த்திகேயன் சினிமாவில் சம்பாதித்தது இதுதான்

ஒவ்வொரு குடும்பத்திலும் ரசிகர்களை உருவாக்கியதுதான் சிவகார்த்திகேயன் சினிமாவில் சம்பாதித்தது என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சூரி. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடித்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சூரி, “ ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்கள் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ, அதைத்தாண்டி இந்த ‘சீமராஜா’ என்னைக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் என் உடலைப் பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ்…

தமிழிசையின் பாசிசப் போக்கு கண்டிக்கத்தக்கது

தன் வேலையைச் செய்யாது பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகத் தான் தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டாரா என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வேல்முருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான். பிறப்பை வைத்து மனிதரை மேல் கீழ் எனப் பார்ப்பது பாவம்; செயலை வைத்து மனிதரை சீர்தூக்கிப் பார் என்கிறார் திருவள்ளுவர். இதில் திருவள்ளுவர் குற்றம் என எதைக் குறிப்பிடுகிறாரோ அதுதான் பாஜகவின் அடிப்படைக் கொள்கை. இக்குற்றம் மற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் தோற்றுவாயாக இருக்கிறது என்பதுதான் இக்குறள்வழி திருவள்ளுவர் நமக்கு உணர்த்துவது. அப்படியிருக்கும்போது அக்கட்சிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர் எப்படிச் சிறப்புடை செயல்கள் செய்வார்? அதற்காக, நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று நாம் வாளாவிருக்க முடியாது; தீமைகளைக் களைந்தாக வேண்டும்; திருவள்ளுவர் வழி தமிழினம்…

மார்­புக்குள் ஊசியை வைத்து தைத்த கொடூரம்

73 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட இரு­தய சத்திர சிகிச்­சையின் போது வைத்தியர்கள் தவ­று­த­லாக ஊசி­யொன்றை அந்­ந­பரின் மார்­புக்குள் வைத்து தைத்­ததால் அந்­நபர் கடும் வேத­னையை அனு­ப­வித்து மர­ண­மான அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க தென்­னஸி மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. லபாயெட் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோன் பேர்ன்ஸ் ஜோன்ஸன் என்ற நபரே சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி தவறால் கடும் வேத­னையை அனு­ப­வித்த நிலையில் உயி­ரி­ழந்­துள்ளார். நஷ்­வில்­லே­யி­லுள்ள றைஸ்டார் வைத்தியசாலையில் சத்­தி­ர ­சி­கிச்சை பூர்த்­தி­ய­டைந்­த­தற்கு 9 மணித்­தி­யா­லங்­களின் பின்­னரே, சத்திர சிகிச்­சையை மேற்­கொண்ட வைத்தியரான ஸ்ரீகுமார் சுப்­பி­ர­ம­ணியன் சத்திர சிகிச்­சைக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஊசி­களில் ஒன்று காணாமல் போயுள்­ளதை அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவரும் அவ­ரது வைத்தியக் குழு­வி­னரும் ஜோன்­ஸனின் இரு­தயப் பகு­தியில் திரும்­பவும் மேல­தி­க­மாக 3 மணி நேர சத்திர சிகிச்­சையை முன்­னெ­டுத்து அவ­ரது மார்பில் வைத்து தைக்­கப்­பட்ட ஊசியை மீட்கும்…

அலரிமாளிகைக்குள் மர்ம இருட்டறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரி மாளிகைக்குள் மர்ம இருட்டறை ஒன்று காணப்பட்டதாகவும் அந்த அறையிலேயே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டதாகவும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தா அவர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அலரிமாளிகைக்குள் அரசியல்வாதிகள் பிரவேசிக்க அச்சம்கொள்வார்கள். ஆனால் அவர்களே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரிமாளிளை சிறப்பாக காணப்பட்டதாக தற்போது பெருமை பேசி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுரேஸ் சுமந்திரன் மோதல் தமிழ் தலைமைகளிடையே வெடிப்பு..

சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களை பார்த்து சுமந்திரன் அதிமேதாவித்தனமாக கேள்வியெழுப்பியிருக்கும் நிலையில் அப் பங்காளி கட்சியினருக்கு வெட்கம், சூடு சுரணை இருந்தால் இது தொடர்பாக சரியான முடிவை எடுப்பார்கள் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சுரேஸ் பிரேமச்சந்திரனது இல்லத்தில் இன்றைய தினம் (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், சுமந்திரனது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறியிருக்கும் நிலையில் அவர்களை பார்த்து சுமந்திரன் ' பங்காளி கட்சியினருக்கு சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரியுமா ' என அதி மேதாவி தனமாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்தகைய நிலையில் அப் பங்காளி கட்சியினருக்கு…

சீனாவில் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று குவிப்பு

சீனாவில், ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன. அந்நாட்டில் லியோனிங், ஹெனான், ஜியாங்சூ, ஜேஜியாங், அன்ஹு ஆகிய 5 மாகாணங்களில் கடந்த வாரம் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. பன்றிகள் மூலம் பிற விலங்குகளுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டதை அடுத்து, பன்றி இறைச்சியைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட இந்த 5 மாகாணங்களிலிருந்து பிற மாகாணங்களுக்கு பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சிக் கடைகளை அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவன உணவு வேளாண் அமைப்பு, மற்ற ஆசிய நாடுகளுக்கும் அது பரவக்கூடும் என்று சென்ற வாரம் எச்சரித்திருந்தது. ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் மனிதர்களுக்கு ஆபத்தில்லை. இருப்பினும், அதனால் பாதிக்கப்பட்ட பன்றிகள் சில நாட்களில் மாண்டுவிடும். அந்தக் கிருமிக்கு எதிரான தடுப்பு…

எதிரணியினரின் சதிக்கு அஞ்சப்போவதில்லை

எதிரணியினர் எத்தகைய சதியை மேற்கொண்டாலும் அவற்றை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்ற முடிந்துள்ளது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாம் முன்னெடுக்கும் திட்டங்களை எவராலும் தடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிம்ஸ்டெக் தலைவராக எமது ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பெறுபேறுகளை கண்டு இந்தக் குழு பீதியடைந்து எமது திட்டங்களை குழப்ப முயன்று வருவதாகவும் அவர் கூறினார். பதுளை – செங்கலடி வீதியின் பிபிலையில் இருந்து செங்கலடி வரையான பகுதியை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இத்தனை காலமும் நாம் மக்களின் ஏச்சுப் பேச்சுக்களை கேட்டாலும் மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இந்த வருடத்தில் கைவீசி பணியாற்றுமாறு அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த…

மருமகன் பயங்கரவாதி இல்லை என்கிறார் இலங்கை அமைச்சர்

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் அவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பதாக நம்ப முடியாது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் நியாயத்தன்மை சம்பந்தமாக பூரண நம்பிக்கை இருக்கின்ற போதிலும் அவுஸ்திரேலியாவின் சட்டம் செயற்படுகின்ற முறை சம்பந்தமாக தமது குடும்பத்தின் அனைவரும் மதிப்பளிப்பதாக கூறியுள்ளார். தனது மருமகன் மொஹமட் நிசாம்தீன் கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தான் அமைச்சராக இருந்த போதிலும் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினூடாக எவ்வித தலையீடும் செய்யப் போவதில்லை…