மனித உடல், மன ஆரோக்கியத்திற்கு மது அவசியமா?

உலகம் முழுதும் மதுப்பழக்கத்துக்கு எதிராக பெரிய போர்க்கொடிகள் தூக்கப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் மனித உடல், மன ஆரோக்கியத்துக்கு ஆல்கஹால் அவசியமா என்பது பற்றி ஆக்ஸ்போர்ட் உளவியல் பேராசிரியர் கட்டுரை ஒன்றில் விளக்கம் அளித்தார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் ராபின் தன்பார். இவர் பரிணாம உளவியல் துறையில் நிபுணர். மனித வாழ்க்கைக்கு ஆல்கஹால் மிக அவசியம் என்கிறார் இவர்.

டெய்லி மெயிலில் இது குறித்து தன்பார் எழுதியதாவது:

பிறருடன் சேர்ந்து மது அருந்துதல் மிக முக்கியமானது, மேலும் பிறருடன் இணக்கமாகி பிணைக்கும் அனுபவத்திற்கான மருந்தே ஆல்கஹால்.

நட்பு என்பது நம்மை புற அச்சுறுத்தல்களிலிருந்தும் நமக்குள்ளேயே இருக்கும் மன அழுத்தங்களையும் விடுவிக்கிறது.

இது நம் பரிணாம வளர்ச்சி வெற்றிக்கு இது மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. நம் உடல் வலியைக் குறைக்கும் எண்டார்பின் என்ற மூளையில் சுரக்கும் ரசாயனம், ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது அதிகம் சுரப்பதால் நம் மன உளைச்சலைக் குறைக்கிறது, மேலும் முழு ஆற்றலுடன் இருப்பதான உணர்வை அளிக்கிறது.

இதன் மூலம் மனித உறவுகளில் அதிக பிணைப்பு ஏற்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கும் பிணைப்பு அனுபவத்தில் எண்டார்பின் பெரிய பங்கு வகிக்கிறது.

எண்டார்பினை சுரக்கச் செய்யும் பல சமூக செயல்களில் சிரிப்பு, ஆடல், பாடல் உள்ளிட்டவை அடங்கும் இதில் ஆல்கஹால் மேலும் திறம்படச் செயல்படுகிறது.

நட்புகள் ஏன் நாம் உயிர் வாழ்வதற்கு முக்கியமானது என்றால், கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் அறிவியல், சமூகவியல் சொல்லாடல்கள் அனைத்தும் நம் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நோய்வாய்ப்படுவது., நோயிலிருந்து எவ்வளவு விரைவில் குணமடைகிறோம், நம் ஆயுளை நீட்டுவது போன்றவற்றில் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நம்மிடம் எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோ என்பது மேற்கூறிய மானிட நடவடிக்கைகளில் அதிக தாக்கம் செலுத்துகிறது.

இப்போது அறிவியலும் இதனை ஊர்ஜிதம் செய்வதால் ஆல்கஹாலை யார்தான் எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள்?

இவ்வாறு பேராசிரியர் தன்பார் எழுதியுள்ளார்.

Related posts

Leave a Comment