ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது நிறைவு தினம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது நிறைவு தினம் இன்று (02) கொண்டாடப்படுகின்றது.

அதற்காக பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று களனி ரஜமகா விகாரையிலும், பம்பலபிட்டிய கதிரேசன் கோவிலிலும், மாளிகாகந்த பள்ளிவாசலிலும் இதற்கான சமய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டம், இம்மாதம் இறுதிக்குள் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் 16 பேர் குழுவும் இதில் கலந்துகொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment