யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மகத்தான வெளியீட்டு விழா

உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள்..

ஒவ்வொரு வருடமும் உலகத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது பலோன் ஓ ஆர் டி என்ற தங்கப்பந்து..

அதை வெல்வதானால் உலகத்தில் உள்ள அனைவரையும் சொந்தத் திறமையால் வெல்ல வேண்டும்.

அது சாதாரண செயல் அல்ல மாபெரும் யாகம், தியாகம்.. அதற்கான போராட்டம் சாதாரணமானதல்ல..

அந்த வெற்றியை அடைவதற்கு அவர்கள் எதிர் கொண்ட சவால்களும், போராட்டங்களும் புதிய வியூகங்களும் உங்களுக்கு தரப்படுகிறது.

ஒருவர் அல்ல இருவர் அல்ல பத்துப்பேருமே தங்கப்பந்து வென்ற தலை சிறந்த வீரர்கள். இவர்கள் ஒருவர் மட்டும்தான் இந்த உலகில் இவர்களுக்கு இணை யாருமே இல்லை.. அப்படிப்பட்ட பத்துப்பேரின் வாழ்க்கை வரலாற்று நூல்.

சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் விளங்கும்படியாக சரியான உதாரணங்களுடன் புரியக்கூடிய எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது.

வாங்கத் தயராகுங்கள்.. இந்த நூல் எங்குமே இலவசமாக வழங்கப்படமாட்டாது.. காரணம் தரம்.. உழைப்பு அப்படி..

இந்த நூலை தமிழகத்தில் படித்து சுவைத்த ஆதி அவர்கள் எழுதியுள்ள சுவைத்தல் உரை இங்கே தரப்படுகிறது. படித்துப் பாருங்கள்..

book flash

——————-

தீவிர உதைபந்தாட்ட ரசிகனான எனக்கு புத்தகத்தின் தலைப்பை கண்டதுமே ஆவல் அப்பிக்கொண்டது “உலகப் புகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள்” ஆவலுடன் திறந்த எனக்கு முதலில் அதிர்ச்சியும் பின்பு ஆச்சரியமும் அடுத்தடுத்த அனுபவங்களாக அமைய சுவாராஸ்யமாகிப் போனது…!

உண்மையில் என்னை நான் உதைப் பந்தாட்ட ரசிகன் என்று அறிமுகம் செய்துகொண்டதெல்லாம் சுத்த பொய். வேண்டுமானால் றொனால்டோ(……!)வின் ரசிகன் என்றிருந்தால் அது உண்மையாக இரந்திருக்கும், ஆனாலும் எனை நான் உதைபந்தாட்ட ரசிகனாக பாவித்ததில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆம், என்னை பொறுத்தவரையில் உதைபந்தாட்டம் என்றால் றொனால்டோ, றொனால்டோ என்றால் உதைபந்தாட்டம். இப்போது சொல்லுங்கள், நான் தீவிர உதைபந்தாட்ட ரசிகன் தானே…?

புத்தகத்திற்கு வருவோம், புத்தகத்தை திறந்ததும் எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது என்றேனே, அது நூல் ஆசிரியர் வரிசைபடுத்தியிருந்த தலைசிறந்த பத்து உதைபந்தாட்ட வீரர்கள் வரிசையில் என் ஆதர்ச நாயகனான றொரால்டோவின் பெயர் இல்லை ஆனால் அதை என்மனம் ஏற்கவில்லை, தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர்கள் பட்டியலில் றொனால்டோவின் பெயர் இல்லாமலா, ஆவலை குறைத்து உணர்ச்சியை அடக்கி மறுபடியும் பட்டியலை மேலிருந்து கீழாக வாசித்தேன், இம்முறை நிதானமாக பெயர் முழுமையும் எழுத்து கூட்டி வாசித்தேன், அதுவெப்படி றொனால்டோவின் பெயர் இல்லாமல் உதைபந்தாட்ட வீரர்கள் குறித்து புத்தகம் எழுத முடியும்….?

என் வாதம் வென்றது, நான் மேலே சொன்ன ஆச்சரியம் அரங்கேறியது, இம்முறை றொனால்டோ “பெரிய றொனால்டோ”வாக அவதாரம் எடுத்திருந்தான், பார்த்த மாத்திரத்தில் நேரடியாக றொனால்டோ பயோஹிராஃபிக்கு தாவினேன், அட அட எத்தனை தகவல்கள்…!

புத்தக ஆசிரியர் எங்கிருந்து தான் அத்தனை தகவல்களை தேடி திரட்டினாரோ…! படிக்க படிக்க கேள்விகள் எழுவதும் அடுத்த வரிகளில் அதற்கான பதில்கள் அமைவதுமாக அத்துனை சுவாராஸ்யத்துடன் செல்கிறது புத்தகம், நூல் ஆசிரியரின் சொல் வளம் வியக்க வைக்கிறது…!

அரசியல் களத்தில் எனது ஆசான், தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அவர்கள் அடிக்கடி ஒன்றை சொல்வார், உலக வரலாற்றில் “தமிழர்கள் எப்பவெல்லாம் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறார்களோ அதன் பின்பான அவர்களின் எழுச்சி என்பது பாரிய எழுச்சியாக இருந்திருக்கிறது” என்றும் இதுதான் இயங்கியல் தத்துவம் என்றும் சொல்வார், அது றொனால்டோ வாழ்விலும் பொருந்தி நின்று தன் தத்துவ நிலைத்தன்மையை மீட்டுக்கொள்கிறது. தனது பதின்ம வயதின் இறுதியில் களம் கண்ட அந்த இளஞ்சிங்கம் அடுத்தடுத்த காயங்களில் துவண்டாலும் மீண்டுவந்து இரண்டு உலகபோப்பைகளில் தனது ஆதிக்கத்தை காட்டியது அவருடைய பேரெழுச்சி…!

ron

ஆடுகளத்தில் அதுவும் உதைபந்தாட்ட ஆடுகளத்தில் முடிவெடுப்பதும் செயல்படுத்துவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள், பாண்டியரும் தத்துவார்த்தமாக அதை பலமுறை சொல்லியிருக்கிறார்.

“வெற்றி என்பது முடிவெடுக்கும் திறனிலும் அதை செயல்படுத்துவதில் உள்ள உறுதியிலுமே மறைந்திருக்கிறது”
-தமிழர் தேசியதந்தை மேதகு செல்வாபாண்டியர்.

அதே வரிகளை சரியாக தேர்ந்தெடுத்து பயோஹிராபியின் இறுதியாக இணைத்திருப்பது நூல் ஆசிரியரின் ஆளுமை…!

தலைசிறந்த பத்து உதைபந்தாட்ட வீரர்களின் பயோஹிராபியை சிறப்பாக தந்திருக்கும் நூலாசிரியருக்கு என் வாழ்த்துகள்.

#ஆதி
#தமிழர்நடுவம்

al

Related posts

Leave a Comment