நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சருகுபுலி

அம்பாறை திருக்கோவில் வனஜீவராசிகள் அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில்-02 சங்கன் விதானை வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்க்குள் நேற்று நள்ளிரவு புலி இனத்தைச் சேர்ந்த விலங்கொன்று (சருகுபுலி) புகுந்ததில் வீட்டில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர்.

இவ் சம்பவம் தொடர்பில் தெரிவித்த வீடடில் உள்ளவரகள்,

தாம் உறங்கிக் கொண்டு இருந்த வேளை எமது சுவாமி அறைக்குள் பொலித்தினால் மூடப்பட்டிருந்த ஜன்னல் வழியாக யாரோ விழுந்தது போல் சந்தம் கேட்டதையடுத்து. திருடன் என்ற சந்தேகத்துடன் அயலவர்களின் உதவியுடன் அறையை சோதனையிட்ட போது இந்த புலி சீரிக் கொண்டு எம் மீது பாய்ந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின் இந்த சருகு புலியை மடிக்கப் பிடித்ததாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் இந்த புலி திருக்கோவில் வட்டமடு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment