நடிகர் சிலம்பரசனை எச்சரித்த நீதிமன்றம்

‘அரசன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க முன்பணமாகப் பெற்ற 50 லட்ச ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

கடந்த 2013-ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிலம்பரசனை வைத்து ‘அரசன்’ என்ற தலைப்பில் படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்தப் படத்துக்காக சிலம்பரசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, முன் பணமாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

ஆனால், அந்தப் படத்தில் சிலம்பரசன் நடிக்காத காரணத்தால் முன் பணமாக கொடுத்த தொகையைத் திரும்ப தரக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Related posts

Leave a Comment