அலைகள் வாராந்தப் பழமொழிகள் 28.08.2018 செவ்வாய்க்கிழமை

வாழ்க்கையை இளமையாக்கி புது நீர் பாய்ச்ச வரும் தகவல்கள்..

01. வாங்கும் ஊதியத்திற்கும் அதிகமாக உழைப்பேன் என்று உறுதிமொழி எடுக்காமலிருப்பது தோல்விக்கான 12 காரணங்களில் முக்கியமானது.

02. ஒரு மனிதன் உற்சாகம் இல்லாமல் வாழ்கிறானா அவன் துரதிர்ஷ்டசாலியாக இருக்கிறான் என்று அர்த்தம். அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு உற்சாகம் ஏற்படாது என்கிறார் எட்வேட் பாக்.

03. ஒரு மனிதனுக்கு எளிமையான வாழ்வின் தொடக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அதுதான் நம்மால் முடியாது என்று சொல்லப்படும் இலக்குகளை எட்டித் தொட வேண்டும் என்ற தூண்டுதலையே ஏற்படுத்துகிறது.

04. வாழ்க்கை அனுபவங்கள் தரும் பாடம் மூலம் மனிதன் அறிவு வளர்ச்சி பெறுகிறான். ஒவ்வொருவரும் தத்தமது கடந்த கால அனுபவங்களை எப்படியாக எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய வெற்றி தோல்விகளின் விகிதாசாரம் அமைகிறது.

05. செல்வச் செழுமை என்பது மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு கருவியாகும். ஆனால் அது வழிபாடு செய்யக்கூடிய ஒரு தெய்வமல்ல. அது ஒரு வாழ்க்கைக் கருவி மட்டுமே.

06. தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றையே ஒருவன் தன் தொழிலாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதுபோல இன்னொருவன் வழங்கப்படும் தொழிலை உண்மையாகவே நேசிக்கிறானா என்பதை கண்டறிந்த பின்னே அதை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

07. கடந்த காலம் ஒரு சன்னல் போன்றது. அதன் மூலமாக உங்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அவதானியுங்கள். அதை வைத்து வாழ்வை எடை போடுங்கள்.

08. உங்கள் ஆர்வம் குறைவுபடாமல் இருந்தால் தோல்வியும் உங்களிடம் தோல்வியடையும் – வின்ஸ்டன் சேர்ச்சில்

09. சக மனிதர்கள் எமக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது அதற்குப் பதிலாக அடுத்தவர் துயரத்தை குறைக்கவும் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவும் நம்மால் என்ன செய்ய முடியுமென யோசிக்க வேண்டும்.

10. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான். வாழ்வில் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்களோ அது வந்தே தீரும்.

11. கஷ்டப்படுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டாமல் உழையுங்கள். வாங்கும் சம்பளத்திற்கு மேல்

12. உங்களால் முடிந்தவரை மனப்பூர்வமாக உழைக்கும் குணத்தை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். நீங்கள் பெறும் ஊதியம் எவ்வளவு இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாது மனப்பூர்வமாக உழைப்பது அவசியமாகும்.

13. உங்களை எது சதா தூண்டிக் கொண்டிருக்கிறதோ அதுவே உங்களுக்கு பொருத்தமான பணியாகும்.

14. தங்கத்தை விடவும் பெரிய விஷயங்கள் உலகில் இருக்கின்றன. மக்களுக்கு செய்யும் சேவைக்கு வருமானம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அது பெருமையே.

15. வெற்றிக்கு ஒரு தத்துவம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டால் யார் வேண்டுமானாலும் உயர்ந்து கொள்ள முடியும். அது ஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பு.

16. உங்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்பு முனைகளை வைத்து உங்கள் சொற் பொழிவுகளை எழுதிப் பாருங்கள். வெற்றி பெறலாம்.

17. வெற்றியை டாலர்களில் மதிப்பிடாதீர்கள். தப்பான காரியங்களை செய்து வங்கியில் உள்ள டாலர்களை உயர்த்துவோரை பெரியவர்களாக கருதுவது தவறு.

18. பணத்தை சேமிப்பதைப் போல வாழ்க்கைக்கு தேவையான அறிவை சேகரிக்கவும் போராடுங்கள்.

19. தோல்வியின் மொழி மிகவும் தெளிவானதாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கும் இதை நீங்கள் அனுபவத்தால் உணர வேண்டும்.

20. எதிரிகளுக்கும் மதிப்பளிக்க தவறாதீர்கள் குறைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் உங்கள் குறைகளை அறிகிறார்கள். மேலும் உங்களை வீழ்த்துவதன் மூலம் எதிரிகள் உங்களுக்கு நல்ல பாடமும் நடத்துகிறார்கள்.

21. ஒரு தோல்வியை நிரந்தரமான தோல்வி என்று எண்ணாதவரை ஒரு மனிதனுக்கு தோல்வி என்பதே கிடையாது.

22. தோல்வி என்பது இயற்கை வகுத்துள்ள ஒரு திட்டமாகும். விதி என்ற தடையை தாண்டி மேலும் உழைக்கத் தயாராவதற்கு அது உதவி செய்கிறது. மனதில் உள்ள மாசுகளை எரித்து சிரமங்களை எதிர் கொள்ளும் பலத்தையும் அது தருகிறது.

23. தோல்வி என்பது ஓர் ஆசீர்வாதம் என்பதை ஏற்றுக்கொள்ள நிறையவே தைரியம் வேண்டும். உழைப்பு வீணாவது தெரிந்தாலும் மனம் துவண்டுவிடாமல் போராட வேண்டும்.

24. உங்களிடம் அர்ப்பணிப்பு குணம் இல்லாவிட்டால் நீங்கள் பாதாளத்தில் நழுவி விழுந்துவிடுவீர்கள். ஆர்வம் என்ற நெருப்பு இருந்தால் சிறகடிக்கும் நகரம் என்ற ஊருக்கு வேகமாக செல்ல முடியும்.

25. தங்கள் வாழ்க்கை பயணத்தை ஊதாசீன படுத்தும் மனிதர்களை அது பள்ளங்களிலும் துன்பங்களிலும் தள்ளி விடும்.

அலைகள் பழமொழிகள் வரும் 28.08.2018

Related posts

Leave a Comment