மரணிக்க முதல் செல்வா பாண்டியர் எழுதிய கடைசி விமர்சன உரை..

தன்னுயிர் தந்து தந்தையானவனின் இந்த எழுத்தே புகழ் வானத்தின் அசரீரியாகட்டும்..

நாளை டென்மார்க் கேர்னிங் நகரில் நடக்க இருக்கும் கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற நூலினை தமிழகத்தில் அச்சிட்டவர் காலம் சென்ற தோழர் செல்வா பாண்டியர்.

அவரோடு தமிழர் நடுவத்தின் தோழர் சுரேஸ் பாண்டியரும் மரணித்திருந்தார். இரண்டு உயிர்கள் அன்று தியாக வெளியில் கலந்தன.

அந்த நூலை.. பல வாரங்களா கண்விழித்து பிரதிபார்த்து படித்து, நிறைவாக செல்வா பாண்டியர் எழுதிய நூலுக்கான விமர்சன உரை இங்கு தரப்படுகிறது.

இவை சாதாரண வரிகளா என்ன..?

ஓர் உயிர் தான் எண்ணியதை எழுதிச் சென்ற உன்னதமான வரிகள்.. காலத்தை வென்ற ஜீவனுள்ள தமிழ் சொற்கள்.

தோழர் செல்வா பாண்டியர் இந்த நூலை அச்சடிக்கும்போது படித்துவிட்டு எழுதிய அவர் வாழ்வின் நிறைவு விமர்சனம் இது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு சோர்ந்துப்போய் இருந்த தமிழினத்திற்கு, தனது எழுத்துக்களின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தவர் மாஸ்டர் துரை.

எமது தமிழர் நடுவத்தின் வெளியீடாக வந்த அவரது “புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து” என்ற நு}ல், அடுத்து என்ன என்ற கேள்வியுடன் குழப்பத்தில் இருந்த தமிழ் இளைஞர்களுக்கு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்க்கொள்ள பெரும் வழிகாட்டியாகவே இருந்தை யாம் அறிவோம்.

அந்த வகையில், எமது நடுவம் வெளியிடவுள்ள அவரது அடுத்த படைப்பான
“கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா.?” என்ற நு}லானது, சர்வதேசிய அரசியலை தமிழ் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

வளர்ந்த நாடு வளரும் நாடுகளை சுரண்டுவது ஒருபக்கம் நடந்துவரும் வேளையில், வளர்ந்த நாடு ஒவ்வொன்றும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழிக்க நடத்தும் சதிகளை அம்பலப்படுத்தி நமக்கு சர்வதேச அரசியலை பல பாடங்களை நடத்தியிருக்கிறார்., மாஸ்டர் துரை.

இந்த அரசியல் வகுப்பை அவர் நமக்கு சொல்லிக்கொடுப்பதற்காக, கிலரி கிளிண்டனின் தேர்தல் தோல்வியை கையில் எடுத்திருக்கிறார்.

நாம் உண்ணும் உணவு தொடங்கி நாம் சுவாசிக்கும் காற்றுவரை அனைத்திலும் அரசியலே மேலோங்கி இருக்கிறதாக சொல்லப்படுவதை தனது எழுத்தின் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார் மாஸ்டர் துரை.

பார்ப்பதற்கு கிலரி ஏதோ தேர்தலில் மக்கள் செல்வாக்கு இல்லாமல் தோற்றுவிட்டது போல் தோன்றினாலும்,
அதன் பின்னே தான் எவ்வளவு அரசியல் சதிகள் நடந்தேறியுள்ளது…..??

அதுவும், அமெரிக்காவை விட அமெரிக்க தேர்தலுக்காக எத்தனை நாடுகள் உழைத்துள்ளன…??

அதுவும் கிலரியை வீழ்த்துவது என்ற ஒற்றை அஜென்டாவில் எப்படி உலகமே கைகோர்த்து வேலை செய்திருக்கிறது…??

அவரை வீழ்த்த வேண்டிய தேவை ஏன் அந்த நாடுகளுக்கு வந்தது….?? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்நு}லில் படிக்க படிக்க, உண்மையிலேயே பிரமிப்பாகத் தான் உள்ளது.

இந்த புத்தகம் நம் இளைஞர்களிடையே அழமான சிந்தனையை து}ண்டும்.

மேலும், கிலரி தேர்தல் தோல்வி அவருடைய ஆளுமைக்கான தோல்வியல்ல என்பதையும், அவர் தன்னளவில் வெற்றியே பெற்று இருக்கிறார் என்பதையும் அழகாக பதிவு செய்கிறது இப்புத்தகம் .

குறிப்பாக, கடைசி 27வது அத்தியாயம் சொல்லும் செய்தி அருமை.

கடந்த தேர்தலில் கிலரி வென்றிருந்தால் தான் அவர் உண்மையான தோல்வியை சந்தித்திருப்பார்.

தவறான காலங்களில் சரியான விடயத்தில் தோற்பதும் ஒருவித வெற்றியே.

அந்தவகையில், கடந்த அமெரிக்க தேர்தல் கிலரிக்கானது அல்ல என்பதை இந்த புத்தம் அழுத்தமாக சொல்லி செல்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, அடுத்து நடக்கப்போவதை பண்டைத்தமிழரின் கணியர்களை போல கணிக்கிறது இப்புத்தகம்.

கிலரி கிளிண்டன் தனது தேர்தல் தோல்வியில் இருந்து மீள்வதுடன், இனி தான் உலகளவில் இன்னும் பேசப்பட போகிறார் என்பது என் கணிப்பாக இருந்தது.

அந்த என் கணிப்பை வழிமொழிகிறது இந்த புத்தகம்.

ஒருநாள் கிலரி மேலும் புகழின் உச்சியை தொடும்போது, அதை பற்றி முன்பே தமிழர்களுக்கு கணியம் சொன்ன நிமித்தகராக இப்புத்தகம் விளங்கும்.

உலகளவில் அரசியல் ராஜதந்திர அறிவும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற நடுவத்தின் வேலை திட்டத்திற்கு, இப்புத்தகம் ஓர் கருவியாக இருக்கும்.

விரைவில் சென்னையிலும், அதனை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் இப்புத்தகத்தின் வெளியிட்டு விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது எமது நடுவம்.

அறிவார்ந்த இளைஞர்கள் அறிவாயுத்ததை கையில் எடுப்பதே, தமிழினத்திற்கு உடனடி தேவை…!!

அதை நோக்கி…..,

செல்வா பாண்டியர்.
தலைவர்,
தமிழர் நடுவம்.
1091 9840377767

Related posts

Leave a Comment