கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா மலேசியாவில் நாளை

நாளை புதன்கிழமை 13.06.2018 அன்று பி.ப.7.30 மணிக்கு மலேசியாவில்..

மரபுசார் வேளாண்மை இயக்க அலுவலகத்தில் ஏம்.ஓ.எப்.ஏயில்..

தமிழர் நடுவத்தின் தலைவர் மறைந்த தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் மற்றும் சுரேஸ் குடும்பனார் நினைவஞ்சலி நடைபெற இருக்கிறது.

அத்தோடு..

கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற சர்வதேச அரசியல் விவகார இராஜதந்திர நூலும் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிகழ்வின் ஏற்பாட்டை செய்வதற்காக தற்போது தமிழகத்தில் இருந்து தமிழர் நடுவத் தலைவர் தோழர் தங்கராசு பாண்டியர், இராமநாதன் பாண்டியர் தலைமையிலான குழுவினர் மலேசியா சென்றுள்ளனர்.

சிங்ப்பூரில் நூலை அறிமுகம் செய்து மலேசியாவில் இப்போது இரண்டாவது அறிமுக நிகழ்வை செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வை கவிஞர் ஜெயகோபி, இயற்கை மருத்துவர் ஆனந்தராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மலேசியா மண்ணில் முன்னெடுக்கிறார்கள்.

இவர்கள் மறைந்த தமிழர் நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியரின் நெருங்கிய நண்பர்களாகும்.

நூலாசிரியர் கி.செ.துரையின் நூல்களை முன்னரும் மலேசியாவில் அறிமுகம் செய்தவர்களாகும்.

மலேசிய வெளியீடுகள் தொடர்கின்றன…

அலைகள் 12.06.2018 செவ்வாய்

Related posts

Leave a Comment