அலைகள் வாராந்தப் பழமொழிகள் 21.05.2018 திங்கள்

அறிவு என்பது மின்சாரத்திற்கு நிகரானது..

01. அறிவு என்பது மின்சாரத்திற்கு நிகரானது.. யாருமே நிரந்தரமான அறிவாளிகளாக இருப்பதில்லை. ஆனால் மனிதர்கள் அறிவை தேடும் சக்தி பெறுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு குழுவுடன் சேரும்போதோ அனுகூலமான சூழல் மாறும்போதோ அவர்கள் புத்திசாலிகளாக மாறுகிறார்கள்.

02. மனதை ஒரு நிலைப்படுத்தி காரியமாற்றியதாலேயே உலக அரங்கில் பலர் அபாரமான வெற்றியாளராக மாறினார்கள்.

03. திட்டமிட்டு முடிவெடுத்து ஒரு முடிவை எடுத்துக் கொண்டால் பின்னர் அதை மாற்றக்கூடாது. மற்றவர் சொல்கிறாரே என்பதற்காக மாற்றம் செய்தால் நாம் திட்டமிட்டிருக்க வேண்டிய தேவை இல்லை.

04. மனதை ஒரு நிலைப்படுத்தி வெற்றி பெற ஒரு சிலரால் மட்டுமே முடியும்.

05. வெற்றி பெற மற்ற எல்லாத் தகுதிகளையும் விட கடினமான விடா முயற்சிதான் மிகவும் முக்கியமானது. அது இயற்கை உட்பட அனைத்துத் தடைகளையும் கடந்து சென்று வெற்றி பெறும்.

06. உங்களிடம் ஒருவரை அறிமுகப்படுத்திக் கொண்டால் அவரது பெயரை நன்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது ஐந்து முறை மனதில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

07. நீங்கள் மனக்கண்ணால் எதை பார்க்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள். ஆதாரம் வேண்டுமா நீங்கள் பார்ப்பது குறைவாக இருந்தால் பெறுவதும் குறைவாகவே இருக்கும்.

08. ஒன்றுடன் ஒன்றை இணைப்பது ஞாபகப் பயிற்சிக்கு மிகவும் முக்கியமான விடயம். அதேசமயம் மிகவும் எளிதான விதி முறையும் கூட.

09. பழக்கம் எவ்வாறு உருவாகிறது.. தொடர்ந்து செய்வதால் உருவாகிறது.

10. ஒரு காரியத்தை திரும்பத் திரும்ப செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல என்பதை புரிந்து கொண்டால் வெற்றி கிடைக்கும்.

11. உங்கள் குறிக்கோளில் ஒரு பகுதி பணம் சம்மந்தப்பட்டதாக இருந்தால் அதை அடைந்துவிட்டதாக கற்பனை பண்ணுங்கள். வீடு ஒன்றை வாங்குவதாக இருந்தால் வாங்கிவிட்டதாக கற்பனை செய்யுங்கள்.

12. மனதை கட்டுப்படுத்தும் பயிற்சியில் ஞாபகப்பயிற்சி ஓரம்சமாக விளங்குகிறது.

13. மற்றவர்களுடன் சமார்தியமாக ஒற்றுமையுடன் நடப்பதால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.

14. வெற்றியை அடைவதற்கு மற்றவர்களின் உழைப்பை எவ்வாறு பெறுவதென்பது தெரிய வேண்டும். அது தெரிந்தவர்களே வெற்றியாளராக வலம் வருகிறார்கள்.

15. வற்புறுத்திக் கேட்பதால் உடனடியாக வெற்றி கிடைப்பது போல தெரியும் ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நிலையான வெற்றியை பெற முடியாது.

16. மனிதனின் உடலை வற்புறுத்திக் கட்டுப்படுத்தலாம் ஆனால் அவனுடைய மனதை ஒரு காலமும் கட்டுப்படுத்த முடியாது. மனப்பூர்வமான ஒத்துழைப்பை அவனாக அளித்தால் மட்டுமே உண்டு.

17. மனதை தூண்டி முன்னேறச் செய்வதும் ஊக்கப்படுத்தி தெம்பூட்டுவதும் நமது வாழ்க்கையின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

18. பெரிய வயலுக்கு சமமானது நமது மனம். செழிப்பான அந்த மண்ணில் எதை விதைத்தாலும் முளைக்கும்.

19. நாம் மனதில் ஒவ்வொரு விநாடியும் எண்ணம் என்ற விதையை விதைக்கிறோம். சுய நினைவின்றி இதை நாம் செய்கிறோம்.

20. மனதை ஒருமைப்படுத்தினால் மனிதன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் விரும்பிய படத்தை மனதில் பதிந்து கொள்ள முடியும்.

21. முயற்சி எடுத்ததும் அது நிஜமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் மனம் மற்றும் உடல் உழைப்பின் மூலமாக ஏற்படும்.

22. மனதை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழ்க்கை முறைகளையும் சீர்திருத்திக் கொள்ள முடியும்.

23. வாழ்வில் இலட்சியத்தை தேர்வு செய்யாவிட்டால் மனதை அடக்கியாள முடியாது.

24. உயிர்த்தெழுதல் எழுப்புதல் கூட்டங்கள் போன்ற இன்றைய மத ரீதியான சடங்குகள் அத்தனையும் ஆன்மீகத்தைவிட உடல் சார்ந்த விடயங்களே என்று இன்றைய மனோதத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

25. ஒரு தனிமனிதன் மனோபாவம் கூட்டத்துடன் சேரும்போது மாறிவிடுகிறது. ஆகவேதான் கூட்டத்தில் வைத்து அவனை ஏமாற்றுகிறார்கள். கூட்டத்தில் நிற்கிறீர்களா எச்சரிக்கையாக இருங்கள்.

அலைகள் பழமொழிகள் 21.05.2018

Related posts

Leave a Comment